- Advertisement -
Homeபொழுதுபோக்குகதையே வேணாம்.. அவங்க டேன்ஸ் ஆடுனா படம் ஹிட்டு - விமர்சையான கருத்தை கூறிய பார்த்திபன்

கதையே வேணாம்.. அவங்க டேன்ஸ் ஆடுனா படம் ஹிட்டு – விமர்சையான கருத்தை கூறிய பார்த்திபன்

- Advertisement -

இயக்குனர் பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகியுள்ள “டீன்ஸ்” திரைப்படமானது கடந்த ஜூலை 12-ஆம் தேதி “இந்தியன் 2” படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. ஒருபுறம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான “இந்தியன் 2” திரைப்படமானது வசூலில் சறுக்களை சந்தித்து வரும் வேளையில் “டீன்ஸ்” திரைப்படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் பிரமோஷனுக்காக தொடர்ச்சியாக பார்த்திபன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பார்த்திபன் பேசியுள்ள பல்வேறு கருத்துக்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளன.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : இப்போது எல்லாம் ஒரு படம் ஹிட்டாக வேண்டும் என்றால் கதை சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும் கதை இல்லை என்றால் கூட படம் ஹிட் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சமீப காலமாகவே வெளியாகி வரும் சில படங்களில் நடிகை தமன்னா நடனமாடியிருப்பது அந்த படத்தின் வெற்றிக்கு பலாமாக இருந்தது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான “ஜெயிலர்” படத்திலும் தமன்னாவின் நடனத்தில் காவலா பாடல் பெரும் ஹிட் அடித்தது என்று பார்த்திபன் பேசியுள்ளார்.

- Advertisement -

இப்படி பார்த்திபன் பேசியுள்ளது மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசும் வகையில் பேசி உள்ளதாக ரசிகர்களும் தங்களது விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 படத்திலும் ராசி கண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் ஆடிய “அச்சோ அச்சோ” பாடலும் பெரிய அளவில் பேசப்பட்டது.

முன்னதாக இந்தியன் 2 படம் குறித்து யாரும் நன்றாக விமர்சனத்தை சொல்லவில்லை என்பதனால் அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று பார்த்திபன் கூறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்