- Advertisement -
Homeபொழுதுபோக்கு2026ம் ஆண்டில் நடிகர் விஜய் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கா? அவருடன் நடித்த சினிமா பிரபலம்...

2026ம் ஆண்டில் நடிகர் விஜய் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கா? அவருடன் நடித்த சினிமா பிரபலம் சொன்ன முக்கிய தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனலை கிளப்பிக்கொண்டு இருக்கிறார். அரசியல் மாநாடுகள், மக்கள் சந்திப்பு பயணங்கள் என அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

விஜய் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் திரண்டு விடுகிறது. ஆனால் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் விஜயுடன் பல படங்களில் நடித்த பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜய் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நான் தினமும் 3 முறை டாக்ஸி காரில் செல்கிறேன். 4 முறை ஆட்டோவில் பயணிக்கிறேன். டிரைவர் இல்லாததால் 10 நாட்களாக எனது காரில் செல்லாமல் ஆட்டோ வாடகை கார்களில் பயணிக்கிறேன். அப்போது நான் காரில் ஏறியவுடன் அவர்கள் கேட்கும் கேள்வி சார் விஜய் பேச்சு நல்லா இருக்கா சார், விஜய் தேர்தலில் ஜெயிச்சுடுவாரா சார் சி எம் ஆவாரா சார் என்பதுதான்.

எப்போது மக்கள் விஜய் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்களோ அதுவே அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். அதுமட்டும் இல்லே, இப்போது திமுகவுக்கு எதிரான வாக்கு நிறைய இருக்கு. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் ரோடு முழுக்க பள்ளம் மேடுமா இருக்கு. மெட்ரோ அது இதுன்னு நிறைய குழியை தோண்டி போட்டிருக்காங்க. மக்கள் நிம்மதியா ரோட்டுல போக முடியலே.

- Advertisement -

ஒரு எடத்துக்கு போகணும் என்றால் இரண்டரை கிலோ மீட்டர் சுத்திதான் போகணும். நேர விரயம். பெட்ரோல் விரயம். எல்லா விலைவாசியும் ஏறியிருக்கு. எங்க வீட்டுக்கு முன்னாடி அஞ்சாறு செங்கல்லை அடுக்கி வெச்சிருந்தால் கூட அடுத்த நாளே கவுன்சிலர் உங்களை பார்க்க விரும்புறார்ன்னு சொல்றாங்க. இப்படி எல்லாமே நடந்துட்டு இருக்கு.

விலைவாசி எல்லாம் கட்டுக்கடங்காம போயிட்டு இருக்கு. இதை எல்லாம் தமிழக முதல்வர் கண்டுக்காமல் அலட்சியப்படுத்துகிறாரோ என்று எனக்கு தோன்றுகிறது. அவங்க கட்சிக்குள்ளேயே நிறைய ஈகோ பவர் விளையாடிட்டு இருக்கு. இதெல்லாம் கண்டிப்பா 2026 தேர்தலில் எதிரொலிக்கும். அந்த மைனஸ் பாயிண்ட் பூரா விஜய்க்கு பிளஸ்சாக மாறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்