- Advertisement -
Homeபொழுதுபோக்குபடையப்பா படம் ஷூட்டிங் முடிந்த பின் உடனடியாக ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம் - இணை...

படையப்பா படம் ஷூட்டிங் முடிந்த பின் உடனடியாக ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம் – இணை தயாரிப்பாளர் சொன்ன லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிஎல் தேனப்பன் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். குறிப்பாக முத்து படத்தில் கேரளாவில் டீக்கடை உரிமையாளராக நடித்திருப்பார். ரஜினியும் மீனாவும் இவரது கடையில்தான் சென்று டிபன் சாப்பிடுவது போல் அந்த காட்சி இருக்கும். கேஎஸ் ரவிக்குமார் படங்களில் இவர் அதிகமாக பணி செய்திருக்கிறார்.

அதே போல் போர்த்தொழில் டிராகன் குரங்கு பொம்மை மகாராஜா என பல படங்களில் பிஎல் தேனப்பன் நடித்திருக்கிறார். வருகிற 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாளில் படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் குறித்த முக்கிய தகவலை பிஎல் தேனப்பன் இப்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் நடிகர் பிஎல் தேனப்பன் கூறியதாவது, படையப்பா படத்தை நடிகர் ரஜினிகாந்த் தான் தயாரித்தார். அவர்தான் தயாரிப்பாளர். நான் இணை தயாரிப்பாளர். இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரும் நானும் அந்த படத்துக்கு ஒரு பட்ஜெட் திட்டமிட்டு கொடுக்கிறோம்.

ஆனால் அந்த படத்தை தயாரித்து முடித்த போது 1.30 கோடி ரூபாய் மிச்சமாகி விட்டது. திட்டமிட்ட செலவை விட 1.30 கோடி ரூபாய் குறைவான செலவிலேயே படத்தை எடுத்து முடித்து விட்டோம். ஒருநாள் ரஜினிகாந்த் என்னை போனில் அழைத்து நேரில் வரச் சொன்னார். நான் அவரது வீட்டுக்குச் சென்றேன். இந்த படத்துக்கான ஆன செலவுகளை எழுதி தருமாறு சொன்னார். நான் எழுதி தந்தேன்.

- Advertisement -

அப்போது நடிகர் நடிகைகள் கேமரா மேன் மேக்கப் மேன் டெக்னிஷீயன்ஸ் என எல்லோருக்குமே அவர்களுக்கு கொடுத்த சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக்கி தரச் சொல்லி விட்டார். அதாவது மீதமிருந்த அந்த ரூ. 1.30 கோடியை படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பிரித்து தரச்சொல்லி விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், நாம் திட்டமிட்ட பட்ஜெட்டை விட குறைந்த செலவில் படத்தை முடிக்க அவர்கள்தான் காரணம்.

இரவும் பகலும் அவர்கள் ஓயாமல் பாடுபட்டதால்தான் இந்த படத்தை இவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடிந்தது. நம்மை பொருத்த வரை இந்த படத்துக்கு இதுதான் செலவு என தீர்மானித்து ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். அதனால் இந்த பணத்தை இந்த படம் உருவாக உழைத்த தொழிலாளர்களுக்கு தருவதுதான் நியாயம் என்று கூறினா் என்று பிஎல் தேனப்பன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்