- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் ரமணா 2 படம் உருவாகிறது… கேப்டன் கேரக்டரில் நடிக்கப் போவது யார்? சண்முகப்பாண்டியனுக்கு வாய்ப்பா?...

விரைவில் ரமணா 2 படம் உருவாகிறது… கேப்டன் கேரக்டரில் நடிக்கப் போவது யார்? சண்முகப்பாண்டியனுக்கு வாய்ப்பா? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவரது பெயர் சொல்லும் முக்கிய படங்களில் ஒன்று ரமணா. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமணா படத்தை தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். கடந்த 2002ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் சிம்ரன் விஜயன் ஆஷிமா பல்லா யூகிசேது ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.

அதிகளவில் லஞ்சம் வாங்கும் அரசு துறை அதிகாரிகளை கடத்திச் சென்று அதில் மிக அதிகளவில் லஞ்சம் வாங்கி முதலிடத்தில் இருக்கும் அரசு அதிகாரியை கொலை செய்யும் ஒரு தீவிரவாத இயக்கத்தை ரமணா செயல்படுத்துவார். ரமணா கேரக்டரில் கேப்டன் விஜயகாந்த் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

குறிப்பாக ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்த முதியவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போல் ஏமாற்றும் டாக்டர்கள் பணம் பறிக்கும் காட்சியை இந்த படம் பார்த்த ரசிகர்கள் வெகுவாக ரசித்து வரவேற்றனர். இப்போதும் இந்த காட்சியை பலரும் விரும்பி ரசிக்கும் அளவுக்கு அந்த காட்சி மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டு இருந்தது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி துப்பாக்கி சர்கார் என 3 படங்களுமே மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. அஜீத்குமார் நடித்த தீனா சூர்யா நடித்த கஜினி 7ம் அறிவு படங்களும் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. அந்த வரிசையில் ரமணா படமும் பெரிய வெற்றிப் படமாக இருந்தது.

- Advertisement -

ரமணா படத்தின் இறுதியில் கேப்டன் விஜயகாந்த் இறந்து விடுவது போல் காட்சி இருந்தாலும் ரமணா 2ம் பாகமாக எப்போது வரும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் படை தலைவன் பட விழாவில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ், விரைவில் கேப்டனின் மகன் சண்முக பாண்டியனை வைத்து ரமணா 2 படம் எடுக்க தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு பேசினார்.

இதற்கிடையே தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், ரமணா 2 படத்தை பதிவு செய்திருக்கிறார். அதனால் ரமணா 2 படம் உருவாகும் முயற்சிகள் துவங்கியுள்ளன. ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார், என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் விஜயகாந்த் நடித்த வலுவான கேரக்டரில் முன்னணி நட்சத்திர நடிகர் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்பதால் ஹீரோ யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்