- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கவிஞர் சினேகன் கூறியதாவது, இதுவரை 4 முறை தேசிய விருதுக்காக மறுதலிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட கவிஞன் நான். 2500 பாடல்கள் எழுதி இருக்கிறேன். அந்த 2500 பாட்டுகள் எழுதினது எனக்கு பெருமையாக இல்லை. ஆனால் எங்கோ ஒரு மூலையில் என்னுடைய பாட்டு சத்தம் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கும் ஒரு விரட்டி பொறுக்கி கொண்டிருக்கும் ஒரு மூதாட்டிக்கும் ஒரு டீக்கடைக்காரர் மனைவிக்கும் என் பாடல் வரிகள் ஒன்று புரிந்தாலும் போதும். எங்கேயோ என்னுடைய ஒரு பாட்டு இன்னொருவருடைய கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது அல்லவா? அதையே தேசிய விருதாக நான் கருதுகிறேன் என்று கவிஞர் சினேகன் கூறியிருக்கிறார்.





