- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து - அதை பற்றி மட்டும் எதுவும் பேசவே இல்லையாம்!

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து – அதை பற்றி மட்டும் எதுவும் பேசவே இல்லையாம்!

- Advertisement -

இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, ரஜினிகாந்த் அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்னிசை பாடும் இதயம். எதிராளிக்கு இன்பம் கடத்தும் மின்சார மனிதர். அவரை பார்த்து நாள் ஆயிற்று பார்க்க வந்தேன். ஜெயிலர் இரண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றேன். கலை பேசினோம் வாழ்வியல் பேசினோம் ஒரு வார்த்தை கூட அரசியல் பேசவில்லை. எப்போது வெளிவரும் சுயசரிதை என்றேன். வேலை நடக்கிறது விரைவில் வெளிவரும் என்றார். உங்கள் சுயசரிதை எதிர்பார்க்கப்படுகிறது என்றேன். ஏன் என்றார். பல பேருக்கு வரலாறு இருக்கிறது. உங்களுக்கு வசீகரமும் இருக்கிறது என்றேன். பசுந்தேனீர் பருகக் கொடுத்தார். அதிலிருந்த துளசி மணம் வீடு வரும் வரை வீசியது நாசியில் என்று அதில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

சற்று முன்