நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கிறார். அவர் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இந்த படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட வைத்த படங்களாக இருந்தன.
குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் ரஜினி முருகன் படமும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய வரவேற்பையும் அடையாளத்தையும் தமிழ் சினிமாவில் பெற்று தந்தது. இந்த படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றால் அது மிகையல்ல. ஆனால் அதன் பிறகு இயக்குனர் பொன்ராம் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை.
குறிப்பாக நடிகர்கள் சசிகுமார் சத்யராஜ் இணைந்து நடித்த எம்ஜிஆர் மகன் படமும் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படமும் மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்தது. அதேபோல் சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் இணைந்து நடித்த கொம்புசீவி படமும் பெரிய அளவில் போகவில்லை. இந்த படமும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருவதால் இயக்குனர் பொன்ராமுக்கு அடுத்தடுத்த படங்கள் இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் போன்றவர்களே இந்தியன் 2 கேம் சேஞ்சர் போன்ற 2 பிளாப் படங்களை கொடுத்தால் அவரை போன்ற திறமையாளர்களையே புறக்கணிக்கும் நிலையில்தான் தமிழ் சினிமா தற்போது இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரியோ தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் பொன்ராம் டைரக்ட் செய்ய இருக்கிறார். அந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அதே கேரக்டரில் இப்போது நடிகர் ரியோ அந்த 2ம் பாகம் படத்தில் நடித்து அவரே அந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
ஆனால் முதலில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அது நடக்காத சூழலில். அந்த படம் தான் இப்போது நடிகர் ரியோ தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடிக்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகமாக உருவாகிறது என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் நிச்சயம் இயக்குனர் பொன்ராமுக்கு கம்பேக் தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





