- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளி வாரத்தில் ரங்கநாதன் தெருவில் புல்லாங்குழல் வாசித்த மாதிரி… குஷி படம் குறித்து தன் நினைவுகளை...

தீபாவளி வாரத்தில் ரங்கநாதன் தெருவில் புல்லாங்குழல் வாசித்த மாதிரி… குஷி படம் குறித்து தன் நினைவுகளை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியாக மாஸ் ஹிட் ஆன படம் குஷி. இப்போது மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போதைய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இயக்கிய படம் தான் குஷி. இந்த படத்துக்கு பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து தன் உணர்வுகளை தமிழ் சினிமா ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து அதில் குஷி படம் குறித்து கூறியிருப்பதாவது, குஷி படத்தின் மறு வெளியீடு பாடல்களை மீண்டும் ஆசை ஆசையாய் அசைபோட வைக்கிறது. பாடல்கள் வசப்படாத படம் மறு வெளியீட்டுக்கு வசதிப்படாது. கால் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தின் பால்ய வயது மற்றும் பதின்ம வயதுக்காரர்களின் நினைவுத் தடத்தில் இன்னும் கும்மி கொட்டிக் கொண்டே இருக்கின்றன குஷி பாடல்கள்.

- Advertisement -

ஆர்மோனியக் கட்டைகளையும் மக்களின் நரம்புகளையும் ஒரு சேரத் தொடத் தெரிந்தவர் தேவா. என் நெஞ்சில் இருந்த காதல் தானே எழுந்து கொண்டதா? நீ எழுப்பினாயா என்பது பாடலின் உள்ளடக்கம். கதை வழி இதை ஒரு கவிதை செய்ய முயன்றேன்.

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டுத் தொட்டு திறக்கும். இது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா, கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும் சின்ன உளி தட்டித் தட்டி எழுப்பும் இது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா? கமர்சியல் பாட்டில் இப்படி ஒரு கவிதை.

- Advertisement -

தீபாவளி வாரத்தில் ரங்கநாதன் தெருவில் புல்லாங்குழல் வாசித்த மாதிரி அபாய முயற்சி. எஸ் ஜே சூர்யாவின் கலைத் துணிச்சல் அபாரமானது. விறுவிறு விஜய் துறு துறு ஜோதிகா இருவரும் பரபர செய்துவிட்டார்கள் பாடலை. திரைக்கதை நுண்மைகளால் எப்போதும் இளமையாய் இருக்கும் இந்த படம்.

பாடலைக் கேட்டு என் நாற்பதுகளுக்கு நகர்கிறேன் நானும். இப்படி இனிமேல் படங்கள் வருமா? பாடல்கள் வருமா? வர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறி இருக்கிறார். கவிஞர் வைரமுத்து திமுகவின் ஆதரவாளர். திமுகவை தற்போது பகிரங்கமாக எதிர்த்து வருபவர் நடிகர் விஜய். எனினும் விஜய் நடித்த குஷி படம் பாடல்கள் குறித்து வைரமுத்து சிலாகித்து எழுதியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்