எப்போதுமே சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் தங்களை இளமையான கேரக்டர்களில் தான் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். 50 வயது 60 வயது கடந்த பல ஹீரோக்கள் தங்களை 30 வயது இளைஞராக தான் திரையில் காட்ட ஆசைப்படுவார்கள். ஆனால் 19 வயதிலேயே 80 வயது கிழவராக நடித்த ஒரு நடிகர், பிறகு வாழ்நாளில் பெரும்பாலும் முதியவராக நடித்து மறைந்திருக்கிறார்.
அதுல பாருங்க வேலாயுதம், நான் பள்ளிக்கூடம் கட்டுனே நீங்க யாரும் படிக்க வரலே ஒரு குளத்தை வெட்டுனேன் நீங்க யாரும் குளிக்க வரலே இன்னைக்கு சினிமா தியேட்டர் கட்டினேன், ஊரே என்னை பார்க்க வந்திருக்குது என்று ஆண்பாவம் படத்தில் வசனம் பேசிய விகே ராமசாமியை தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது.
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் படங்களில் கூட வயதான தோற்றங்களில் தான் பெரும்பாலும் விகே ராமசாமி நடித்திருப்பார். வில்லனாக அல்லது கதாநாயகியின் அப்பாவாக இருப்பார். அதே போல் ரஜினி கமல் விஜயகாந்த் நடித்த படங்களிலும் விகே ராமசாமி நிறைய படங்களில் தாத்தா அப்பா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
அதன்பிறகு 2000ம் ஆண்டுகளில் வெளியான சில படங்களில் கூட விகே ராமசாமி நடித்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு சிறந்த கலைஞர் நடிகர் விகே ராமசாமி. பெரும்பாலான படங்களில் அவர் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி பெரும்பாலான படங்களில் அவர் வயதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகன் அல்லது கதாநாயகியின் அப்பா கேரக்டரில் அவர் நடித்திருப்பார்.
ஊரில் யாராவது பெரிய மனிதர் என்றால் ஊர் நாட்டாமை பஞ்சாயத்து தலைவர் போன்ற கேரக்டரில் விகே ராமசாமி முதியவராக நடித்திருப்பார். அவர் பல படங்களில் முதியவராக நடித்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. நாம் இருவர் என்ற நாடகத்தில் 80 வயது முதியவர் ததாபாத்திரத்தில் விகே ராமசாமி நடித்திருக்கிறார். ஆனால் அப்போது விகே ராமசாமிக்கு வயது வெறும் 19 தான். ஆனால் அவரது மேக்கப் உடல் தோற்றம் மற்றும் குரல் அந்த வயதான கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியது.
பிறகு நாம் இருவர் என்ற அந்த மேடை நாடகம் திரைப்படமாக உருவான போது வி கே ராமசாமியும் அந்த படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு வயதான கதாபாத்திரங்கள் அவருக்கு தொடர்ந்து அமையத் தொடங்கின. அதன் பிறகு தான் விகே ராமசாமி வயதான கெட்டப்களில் பெரும்பாலான படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





