- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு பக்கம் ரஜினி - தனுஷ் மோதறாங்க, மறுபக்கம் சூர்யா - நயன்தாரா மோதறாங்க -...

ஒரு பக்கம் ரஜினி – தனுஷ் மோதறாங்க, மறுபக்கம் சூர்யா – நயன்தாரா மோதறாங்க – இதுல இராமாயணம் படமும் களத்துக்கு வருது, தீபாவளி இப்பவே களை கட்டுதே?

- Advertisement -

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் எந்த படங்கள் எல்லாம் தீபாவளிக்கு திரைக்கு வரப் போகிறது என்கிற ஆர்வம் இப்போதே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வந்துவிட்டது. குறிப்பாக நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியானால் தான் தீபாவளி களை கட்டும். ரசிகர்களுக்கும் அது தனி உற்சாகத்தை கொடுக்கும்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படம் தீபாவளிக்கு முன்னதாகவே திரைக்கு வந்து விடுகிறது. வருகிற அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துவிட்டது. அதனால் இந்த முறை தீபாவளிக்கு ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் என 4 பேரின் படங்கள் எதுவும் திரைக்கு வரப் போவது இல்லை.

- Advertisement -

அதே நேரத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஓம் படம் வருகிற அக்டோபர் 16ம் தேதி திரைக்கு வர உள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ம் தேதி வருவதால், தீபாவளிக்கு போய் விடலாம் என்றுதான் தனுஷ் திட்டமிட்டார். ஆனால் தீபாவளிக்கு இராமாயணம் படம் ரிலீஸ் செய்யப்படுவதால் போதிய தியேட்டர் கிடைக்காத ஒரு சிக்கலில் ஓம் படத்தை ஜெயிலர் 2 படம் வெளியாகும் மறுநாளே வெளியிடும் ஒரு முடிவுக்கு நடிகர் தனுஷ் தள்ளப்பட்டுள்ளார்.

அதனால் ஜெயிலர் 2 மற்றும் ஓம் படங்கள் ஒரு நாள் இடைவெளியில் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. அடுத்து இராமாயணம் படம் 6000 தியேட்டர்களில் தீபாவளிக்கு வெளியாகும் சூழலில் நடிகை நயன்தாரா நடித்த சுந்தர் சி இயக்கிய மூக்குத்தி அம்மன் 2 படமும் தீபாவளிக்கு தான் வெளியாக உள்ளது.

- Advertisement -

இராமாயணமும் பக்தி படம், மூக்குத்தி அம்மன் 2 படமும் பக்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிக்கப் போவது இராவணனா, அல்லது அம்மனா என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எழுந்துவிட்டது. அதே நேரத்தில் மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 47 படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.

அதனால் தமிழில் சூர்யா – நயன்தாரா படங்கள் தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக களத்தில் மோதுகின்றன. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் இன்னும் சில படங்கள் தீபாவளி பண்டிகையை குறிவைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் தீபாவளிக்கு அதிக படங்கள் வருவது வசூலை குவிக்க வாய்ப்பாக அமையும். அதே நேரத்தில் 10 படங்கள் 12 படங்கள் தீபாவளி ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும் கடைசியில் அது 2 படங்களாக 3 படங்களாக குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

- Advertisement -

சற்று முன்