நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்தை இயக்கியவர் இயக்குனர் மகிழ் திருமேனி. இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் நடந்த நிலையில் பல மாதங்கள் தாமதமாக திரைக்கு வந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் பலத்த தோல்வியை சந்தித்தது.
அதற்கும் விடாமுயற்சி படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான். ஹாலிவுட்டில் ஹிட் ஆன அந்த படத்தை அப்படியே காப்பியடித்து எடுக்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. நடிகர் அஜீத்குமாருடன் திரிஷா அர்ஜூன் ரெஜினா கசாண்ட்ரா ஆரவ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்த நிலையில் படம் சரியாக போகவில்லை.
நடிகர் அஜீத்குமார் ஒரு படத்தில் நடிக்க ரூ. 185 கோடி வரை சம்பளம் கேட்டார். பிறகு யாருமே அவரது படத்தை தயாரிக்க முன்வராத நிலையில் ரூ. 150 கோடி வரை இறங்கி வந்தார். ஆனால் அப்போதும் யாரும் முன்வராத நிலையில் இப்போது அவரே தனது 64வது படத்தை சொந்தமாக தனது மனைவி ஷாலினி பெயரில் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜீத்குமார் நடிப்பில் மாபெரும் தோல்வி படத்தை தந்த இயக்குனர் மகிழ் திருமேனி இப்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சனை மகிழ் திருமேனி அணுகியிருக்கிறார். ஆனால் அவர், அவுட்டோர் ஷூட்டிங் எல்லாம் என்னால் வர முடியாது. உடல் நலம் ஏற்றுக்கொள்ளாது. ஒரு ஏசி ப்ளோரில் மட்டுமே தன்னால் நடிக்க முடியும் என்று கூறி மறுத்து விட்டார்.
அதன்பிறகு நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. இவர் ஏற்கனவே தமிழில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். அதனால் இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் முக்கிய பிரச்னை ஒன்று இதுவரை நீடித்து வருகிறது.
அதாவது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் இதுவரை முன்வரவில்லை. இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 60 கோடி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் யாரும் ஒகே சொல்லாத நிலையில் இந்த படத்துக்கான தயாரிப்பாளரை இயக்குனர் மகிழ் திருமேனி தேடி வருகிறார் என்கிற லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.





