- Advertisement -
Homeபொழுதுபோக்குகோலிவுட்டில் தொடரும் பரபரப்பு… போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் - தொடர்ந்து கழுகு...

கோலிவுட்டில் தொடரும் பரபரப்பு… போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் – தொடர்ந்து கழுகு பட நடிகருக்கு சம்மன் அனுப்பிய போலீசார்!

- Advertisement -

ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். பிறகு ஏப்ரல் மாதத்தில் பார்த்திபன் கனவு போஸ் நண்பன் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக மாறினார். இந்நிலையில் நேற்று அவர் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் நடிகர் ஸ்ரீகாந்த் சில பார்ட்டிகளில் கலந்துக்கொண்ட போதுதான் இந்த போதைப் பொருளை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் 4.72 லட்சம் ரூபாய்க்கு போதைப் பொருள் வாங்கியதால் மற்றவர்களுக்கும் அதை கொடுத்தாரா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சமீபத்தில் கலந்துக்கொண்ட விழாக்கள், நிகழ்ச்சிகள் குறிப்பாக விருந்து கொண்டாட்டங்கள் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். அந்த விழாக்களில் கலந்துக்கொண்ட சில நடிகர்கள் சில நடிகைகள் மீதும் போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.

இந்த சூழலில் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். போலீசார் விசாரணைக்கு அவர் நேரில் வர வேண்டும் என சம்மன் அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கேரளாவில் இப்போது நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்பில் உள்ள நிலையில், சில தினங்களில் அவர் போலீசார் விசாரணைக்கு நேரில் வர இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணாவுக்கு சமீபத்தில்தான் 2வது திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணா கழுகு வாணவராயன் வீரா வன்மம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

வழக்கமாக இந்தி தெலுங்கு நடிகர்கள் தரப்பில்தான் இதுபோன்ற போதைப் பொருள் விவகாரத்தில் போலீசில் சிக்குவார்கள். இப்போது தமிழ் சினிமாவிலும் போதைப் பொருள் விவகாரம் தலைதூக்கி இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இதில் யார் யார் சிக்கப் போகிறார்கள் என்ற பதட்டமும் கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்