- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் செய்த விஷயம்… தகவலறிந்து தடாலடியாக அங்கு வந்த எம்ஜிஆர் - அப்புறம்...

படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் செய்த விஷயம்… தகவலறிந்து தடாலடியாக அங்கு வந்த எம்ஜிஆர் – அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!

- Advertisement -

கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஜெய்சங்கர் முத்துராமன் ஸ்ரீகாந்த் போன்றவர்கள்தான் முன்னணி நடிகர்கள். இதில் ஜாம்பவான்கள் என்றால் அது எம்ஜிஆர் சிவாஜி கணேசன் என இருவர் மட்டும்தான். எம்ஜிஆர் எப்போதுமே சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலுமே அதிக கவனமாக இருப்பவர். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார்.

ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர் எம்ஜிஆர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. மதியம் உணவு இடைவேளை வந்தது. அப்போது படத்தின் நாயகன் எம்ஜிஆர் மற்றும் கதாநாயகி இயக்குனர் ஒளிப்பதிவாளர் என முக்கியமான நபர்களுக்கு அறுசுவை உணவு அசைவ உணவு பரிமாறப்பட்டது.

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் இருந்த லைட்பாய் மேக்கப்மேன் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு தக்காளி சாதம் தயிர்சாதம் சாம்பார் சாதம் போன்றவை பரிமாறப்பட்டுள்ளது. தொடர்ந்து சில தினங்களாக இது நடந்த நிலையில், இது ஒருநாள் எம்ஜிஆர் கவனத்துக்கு சென்றுவிட்டது. அன்று தயாரிப்பாளரிடம் இதுபற்றி எதுவும் பேசாத எம்ஜிஆர், வழக்கம்போல் படப்பிடிப்பில் நடித்துவிட்டு மதிய உணவு இடைவேளையின் போது நேராக தொழிலாளர்கள் சாப்பிடும் பகுதிக்கு சென்று அவர்களுடன் ஒருவராக அமர்ந்துக்கொண்டார்.

எம்ஜிஆர் வழக்கமான இடத்தில் அமர்ந்து சாப்பிடாமல் தொழிலாளர்களுடன் போய் அமர்ந்துக் கொண்டதை பார்த்த தயாரிப்பாளர் ஆடிப்போய் விட்டார். நான் இங்கேயே சாப்பிடுகிறேன், பரிமாறுங்க என்றும் அங்கிருந்த படக்குழுவினர் கூறிவிட்டார். அங்கிருந்த தயாரிப்பாளர் பதட்டத்துடன் ஓடி வந்து, நீங்க தனியா வந்து சாப்பிடுங்க என்று அழைத்திருக்கிறார். எம்ஜிஆர் வரமாட்டேன் என மறுத்திருக்கிறார். பிறகு தயாரிப்பாளர், தவறுதான் மன்னித்து விடுங்கள் என்று எம்ஜிஆரிடம் கேட்டிருக்கிறார்.

- Advertisement -

அப்போது தயாரிப்பாளரிடம் பேசிய எம்ஜிஆர், மனிதனாக பிறந்த எல்லோருக்குமே பசி பொதுவானதுதான். அப்படி பசிக்கும்போது ஒருவருக்கு அசைவ உணவு அறுசுவை உணவு என பரிமாறிவிட்டு மற்றவர்களுக்கு சாதாரண உணவை வழங்குவது சரியல்ல. நியாயமும் அல்ல. இந்த பாகுபாடு கூடாது. எனக்கு வழங்கப்படுவது போன்ற உணவே இங்கு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதையே பரிமாற வேண்டும்.

ஒருவேளை இப்படி ஒரே மாதிரியான உணவை அனைவருக்கும் பரிமாறுவதில் உங்களுக்கு தயாரிப்பு செலவில் அதிக இழப்பு ஏற்படும் என்றால், அதை எனது சம்பளத்தில் கழித்து கொள்ளுங்கள். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவை தான் பரிமாற வேண்டும் என்று அன்பு கட்டளையாக அதே நேரத்தில் உறுதியாகவும் கூறியிருக்கிறார். அன்று முதல் எம்ஜிஆர் படப்பிடிப்பு தளம் என்றாலே, ஹீரோ முதல் லைட்பாய் உள்ளிட்ட அனைவருக்குமே ஒரே மாதிரியான அறுசுவை உணவுதான், அசைவ விருந்துதான் என்பது எழுதப்படாத சட்டமாக மாறியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்