- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் விஜயகாந்த் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

கேப்டன் விஜயகாந்த் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். துவக்கத்தில் புரட்சிக் கலைஞர் என அழைக்கப்பட்ட விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன் என்ற இவரது 100வது படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் என அழைக்கப்பட்டார்.

தேமுதிக கட்சிக்கு மக்கள் அளித்த அமோக வரவேற்பால், திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்கட்சி தலைவராகவும் இருந்த விஜயகாந்த், உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாகவே மிகவும் பலவீனமாக காணப்பட்டார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல் இப்போது கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விஜயகாந்த் மறைவை அடுத்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ் உணர்வும் தாராள மனமும் கொண்டவர் விஜயகாந்த். நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர். அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. திரையுலகிலும், பொதுவாழ்விலும் முத்திரை பதித்தவர். விஜயகாந்துடன் எனது நட்பு, எந்த காலத்திலும், எந்த சூழலிலும் மாறவே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி விடுத்துள்ள செய்தியில், பொதுவாழ்விலும் கலைத்துறையிலும் செயற்கரிய பல அரிய செயல்களை செய்துள்ள விஜயகாந்த், கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திரையுலகில் மட்டுமல்லாது, தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர். தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் அதீத பற்றுக்கொண்டிருந்த விஜயகாந்த் மறைவுக்கு அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது செய்தியில், மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார் விஜயகாந்த், என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், விஜயகாந்த் மறைவு செய்தி, என்னை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டது. என்றாவது ஒருநாள் குணமடைந்து மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார். பழையபடி அவரை பார்க்கலாம் என ஆசைப்பட்டேன். அதெல்லாம் நிறைவேறாமல் போய்விட்டது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்