- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா புஷ்பா 2 படங்களை இயக்கிய சுகுமாரன்… புஷ்பா 3 படத்துக்கு முன்னால் கையில் எடுக்கும்...

புஷ்பா புஷ்பா 2 படங்களை இயக்கிய சுகுமாரன்… புஷ்பா 3 படத்துக்கு முன்னால் கையில் எடுக்கும் புதிய படம் – ஹீரோ யாருன்னு தெரியுமா? போட்றா வெடிய…

- Advertisement -

ஒரு நல்ல திரைப்படம் என்பது அந்த படத்தில் நடித்த ஹீரோ நடிகரையும் படத்தை இயக்கிய டைரக்டரையும் உச்சத்துக்கு கொண்டு சென்று விடுகிறது. கன்னடத்தில் காந்தாரா படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டி இன்று நட்சத்திர நடிகராக இந்தியா சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து விட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் மீண்டும் இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 படமும் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. இதுவரை 400 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டது.

இதே போல் தெலுங்கில் கமர்ஷியல் ஹீரோவாக இருந்த நடிகர் பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி பாகுபலி 2 படங்களில் நடித்தார். அந்த படம் இந்தியா முழுவதும் பெரிய ஆதரவை வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது பான் இந்தியா நட்சத்திர நடிகராக பிரபாஸ் மாறிவிட்டார். அவர் நடித்த கல்கி 2898 ஏடி 2 படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும் பிரபாஸ் நடித்த தி ராஜாசாப் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி சங்கராந்திக்கு வெளிவர உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் இப்போது ஐகான் ஸ்டாராக தமிழ் சினிமாவில் பவனி வர காரணம் அவர் நடித்த புஷ்பா புஷ்பா 2 படங்கள்தான். புஷ்பராஜ் கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் புஷ்பா 3 என 2027ம் ஆண்டில் உருவாகிறது.

புஷ்பா புஷ்பா 2 படங்களில் அபார வெற்றிக்கு காரணமாக இருந்தவர் படத்தின் இயக்குனர் சுகுமாரன்தான். படத்தின் ஒவ்வொரு ஷாட்டையும் நேர்த்தியாக சிறப்பாக ரசிகர்களின் மனதை ஈர்க்கும் விதமாக அமைத்து அந்த படத்தை வேற லெவலில் உருவாக்கி ரசிகர்களுக்கு தந்திருந்தார். புஷ்பா புஷ்பா 2 படங்களுக்கு பிறகு இயக்குனர் சுகுமாரன் சம்பளம் ரூ. 100 கோடியாக உயர்ந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை தரும்போது அதன் 2ம் பாகத்தை அதைவிட சிறந்த படைப்பாக ரசிகர்கள் விரும்பும் வகையில் தர வேண்டும். அது இயக்குனர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். அந்த வகையில் பாகுபலி 2 காந்தாரா சாப்டர் 1 புஷ்பா 2 போன்ற பான் இந்தியா படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. இப்போது புஷ்பா 3 படத்தை உருவாக்க உள்ள இயக்குனர் சுகுமாரன் முதல் 2 பாகங்களை விட புஷ்பா 3 படத்தை இன்னும் சிறப்பாக தரமாக தரவேண்டிய நெருக்கடியில் உள்ளார் என்பதும் கவனித்தக்கது.

இந்நிலையில் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா 3 படத்துக்கு முன்பாக இயக்குனர் சுகுமாரன் ஒரு படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் நமது பாகுபலி நாயகன் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தயாரிக்கப் போவது வாரிசு கேம் சேஞ்சர் போன்ற படங்களை தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்