நடிகர் சிலம்பரசனுக்கு ஒரு கம்பேக் கொடுத்த படம் என்றால், அது வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படம்தான். இந்த படமும் டைம் டிராவல் கருவையை அடிப்படையாக கொண்டதுதான். இது, ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.
இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், வாகை சந்திரசேகர் என, 1980, 90களில் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருந்த வர்களை நடிக்க வைத்தது சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. இதில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்குநர்தான் என்றாலும், அவர் இயக்கும் படங்களில் ஏதேனும் ஒரு சின்ன கேரக்டரில் வந்துவிடுவார். அதையே இப்போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் பல படங்களில் பின்பற்றுகிறார்.
மாநாடு படம், அரசியலை மையப்படுத்திய கதையாக இருந்தது. இதில் போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனராக நடித்த எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய உறுதுணையாக இருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிலம்பரசன் நிறைய படங்களில் கமிட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே அவரது ரசிகர்களுக்கு மிஞ்சியது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்த பத்துதல படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதே போல் வெந்து தணிந்தது காடு படமும், ஆக்ஷன் திரில்லர் படமாக இருந்த நிலையில், மல்லிப் பூ வெச்சு வெச்சு வாடுது, பாடல் ஹிட் ஆன அளவுக்கு படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.
இந்நிலையில், மாநாடு படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள், நன்றிகள் தெரிவித்து படத்தின் போஸ்டருடன் சிலம்பரசன் ஒரு பதிவை, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதை படத்தில் நடித்த மற்ற நடிகர்கள், நடிகையர் மற்றும் டைரக்டர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் டேக் செய்துள்ளார்.
ஆனால், மாநாடு என்ற ஒரு படம் உருவாக, வெளியாக, மக்கள் மத்தியில் சேர, சிலம்பரசன் அந்த படத்தில் நடிக்க காரணமாக இருந்தவர் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு மட்டும் டேக் செய்யவில்லை. எஸ்ஜே சூர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என அனைவருக்கும் டேக் செய்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிம்பு, அந்த படத்தின் தயாரிப்பாளரை மறந்தது எப்படி என்ற ஒரு விமர்சனம் இப்போது சூட்டை கிளப்பியுள்ளது.





