பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக நடித்துள்ள படம் ஜப்பான். குக்கூ, ஜோக்கர், சிப்ஸி ஆகிய படங்களை எடுத்த ராஜூமுருகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்தியின் 25வது திரைப்படம் ஆக இது உருவாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட திருவாரூர் முருகனைப் பற்றிய கதை தான் இது என்று கூறப்படுகிறது. இது டீசர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பிறகு அவர் நலன் குமாரசாமி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கார்த்தியின் தாத்தாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். இதில் இருவரும் எம்ஜிஆர் ரசிகர்களாக நடிக்கிறார்களாம். படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60% முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, 96 திரைப்படத்தை எடுத்த பிரேம்குமார் உடனும் கார்த்தி இணைகிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம்.
இதனிடையே ஜப்பான் படத்தை தயாரித்துள்ள எஸ்.ஆர். பிரபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், படத்தின் முன்னோட்ட காட்சிக்கான நிகழ்ச்சி வரும் 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக ஜப்பான் திரைப்படம் இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் மாதிரியான காட்சிகள் இதில் இல்லை.
லியோ படத்தின் சர்ச்சையை ஒரு படைப்பாளியின் சுதந்திரமாகத் தான் நான் பார்க்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிலையில் ஜப்பான் படத்தின் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா பங்கேற்க இருக்கிறாராம். அதுபோக லோகேஷ் கனகராஜன் இதில் கலந்து கொள்கிறாராம்.
தற்போது சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு, சுதா கொங்கரா படத்தில் இணைகிறார். இதேபோல் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தலைவர் 171 படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஜப்பான் மேடையில் இருவரும் தங்களது அடுத்த ப்ராஜெக்ட் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைதி 2 படத்திற்கான முக்கியமான அறிவிப்பையும் லோகேஷ் வெளியிடுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதேபோல் அவரின் கனவு திரைப்படமான இரும்புக்கை மாயாவி குறித்தும் சில அப்டேட்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





