நடிகர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை டைரக்ட் செய்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அவரே நாயகனாக நடித்து இயக்கிய படம்தான் லவ் டுடே. இந்த படமும் மாஸ் ஹிட் ஆனது.
பிரதீப் ரங்கநாதன் இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் காதலை மையப்படுத்திய கதையில் உருவாகி இருந்தது. இதற்கு முந்தைய கோமாளி படமும் காதல் படமாக தான் இருந்தது. அதன்பிறகு அஸ்வின் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான டிராகன் படம் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பிரதீப் ரங்கநாதன் அனுபமா பரமேஸ்வரன் கயாடு லோஹர் கேஎஸ் ரவிக்குமார் கௌதம் மேனன் மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் இந்த ஆண்டில் வெளியான முக்கிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
டிராகன் படமும் காதலை மையப்படுத்திய ஒரு படமாக தான் இருந்தது. இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே என்னும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் டைட்டிலேயே காதல் இருப்பதால் இந்த படமும் காதல் கதைக்களத்தில் உருவானதுதான் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் இந்த சூழலில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், இனிமேல் என்னிடம் காதல் கதை சொல்லாதீர்கள். காதல் ஜானர் படங்களில் தொடர்ந்து நடிக்க நான் விரும்பவில்லை. நல்ல அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த கதைகளில் நடிக்க விரும்புகிறேன். அது மாதிரியான கதைகளை தயார் செய்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.ஏனென்றால் தனது சம்பளம் பல கோடி ரூபாய் அதிகரிக்கவும் பெரிய ஆக்சன் ஹீரோவாகவும் மாற அவர் விரும்புகிறார்.
மேலும் நான் இயக்கி நடிக்க போகும் படமும் காதல் படம் அல்ல; சண்டை காட்சிகள் நிறைந்த படமாக தான் அதுவும் இருக்கும் என்றும் பேசியிருக்கிறார். கேங்ஸ்டர் சண்டை கதைகளை கொண்ட கங்குவா விடாமுயற்சி ரெட்ரோ சமீபத்தில் வெளியான தக்லைஃப் வரை பல படங்கள் பிளாப் ஆகி வருகின்றன. இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவு தேவையா பாஸ்? ரெட்ரோ தக்லைஃப் படங்களை பார்த்த பிறகும் இப்படி யோசிக்கலாமா ப்ரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





