- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் படத்தை காப்பி அடிக்கிறேன்னு சொன்னாங்க... ஆனா, நீதிமன்றத்தில் என்ன நடந்துச்சு தெரியுமா... என்ன அட்லி...

நான் படத்தை காப்பி அடிக்கிறேன்னு சொன்னாங்க… ஆனா, நீதிமன்றத்தில் என்ன நடந்துச்சு தெரியுமா… என்ன அட்லி இப்படி சொல்லிட்டாரு…

- Advertisement -

இயக்குனர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தத் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகும் நிலையில், இதற்கான ப்ரீ புக்கிங் மிக வேகமாக நடந்து வருகிறது.

கோலிவுட்டில் பட்டையை கிளப்பிய அட்லி, முதல்முறையாக பாலிவுட்டுக்கு சென்று இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்துள்ளது. தொடக்கத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அட்லி, இப்போது இந்தி திரையுலகில் கால் பதிக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் சங்கரின் உதவியாளராக இருந்த அவர், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு பிரமாண்ட வெற்றியை தேடி கொடுக்க, தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கினார். விஜயுடன் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததால் அட்லி, ஊர் போற்றும் இயக்குனராக பலரிடமும் போய் சேர்ந்தார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், அட்லி பிற படத்தின் கதையையே அப்படியே எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. ராஜா ராணி திரைப்படம் மௌன ராகத்தை போல் உள்ளது என்றும், தெறி திரைப்படம் சத்ரியனை போல் இருப்பதாகவும், மெர்சல் திரைப்படம் அபூர்வ சகோதரர்களை உள்ளது என்றும் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அட்லி, தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

மெர்சல் திரைப்படத்தை மூன்று முகத்தின் கதை என்று கூறி வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர், கடைசியில் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தினார். பிகில் படத்தை தனது கதை என்று கூறியவரின் வருங்காலத்தை எண்ணி நான் வருந்தினேன். அடிக்கடி நான் நீதிமன்றத்திற்கு சென்றாலும், அனைத்திலும் நானே வெற்றி பெற்றேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஜவான் திரைப்படம் பற்றி கூறிய அவர், இந்தப் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை என்றும், நான்தான் படத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அஜித்துடன் பணிபுரிய விருப்பமா என்று அட்லியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அவர், “ஒரு இயக்குனராக திரைத் துறையில் இருக்கும் ஒவ்வொரிடமும் பணிபுரிய எனக்கு ஆசை உண்டு. எதிர்காலத்தில் ஹாலிவுட் செல்வதற்கும் விரும்புகிறேன். நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்போது அஜித்துடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்