- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நூறாவது நாளை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன் திரைப்படம்... அட...

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நூறாவது நாளை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன் திரைப்படம்… அட தரமான சம்பவம்னா அது இதுதாங்க….

- Advertisement -

2025 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 5 மாதங்கள் நிறைவு பெற்று விட்டன. இதில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இருப்பினும் வசூல் ரீதியாக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபமாக அமைந்த திரைப்படங்கள் என்பது மிகவும் சொற்ப அளவு தான். வெறும் 4, 5 திரைப்படங்கள் மட்டுமே இந்த இடத்தை பிடித்தன.

முதலில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜ ராஜா திரைப்படத்தை இதில் நாம் கூறலாம். 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சந்தானத்தின் கிளாசிக்கான காமெடியும், சுந்தர் சியின் சூப்பரான திரைக்கதையும் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்தது.

- Advertisement -

இதேபோல் அஜித் குமாருக்கு வெளியான குட் பேட் அக்லி திரைப்படமும் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டது. கலவையான விமர்சனத்தை இது பெற்றிருந்தாலும், மசாலா கலந்த கமர்சியல் படம் என்ற லெவலுக்குள் வந்ததால் குட் பேட் அக்லியை கொண்டாடினார்கள். இதேபோல் டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் மாமன் ஆகிய திரைப்படங்களும் வசூல் ரீதியாக லாபத்தை கொடுத்தன.

இதில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் ஓரளவு லாபத்தை ஈட்டிய காவியமாகவே அமைந்தது. இருப்பினும் இந்த வருடம் வந்த திரைப்படங்களிலேயே தற்போதைக்கு டாப் லிஸ்டில் இருப்பது பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம்தான். அஸ்வந்த் மாரிமுத்து இதனை இயக்கி இருந்தார். இதன் முன்னோட்டம் வெளியாகும் போது, பலரும் இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் டான் போல் இருப்பதாக கூறினர்.

- Advertisement -

இப்படி பல விமர்சனங்களை எதிர்கொண்ட டிராகன் திரைப்படம், ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு நல்ல விமர்சனத்தை பெற்றது. கல்விதான் முக்கியம் என்பதை, விறுவிறுப்பான தனது கதையின் மூலமும் நகைச்சுவையின் மூலமும் கூறி இருந்த அஸ்வந்த் மாரிமுத்து பலராலும் பாராட்டப்பட்டார். கிட்டத்தட்ட முப்பத்தைந்து கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்த நிலையில், அதன் திரையரங்கில் இந்த திரைப்படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படம் நூறாவது நாளை எட்டி இருக்கும் நிலையில் அதற்கான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்த பலரும் டிராகன் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்