- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்... இந்த முறை கன்டன்டே செம்ம 'கிக்'கா இருக்குதே......

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்… இந்த முறை கன்டன்டே செம்ம ‘கிக்’கா இருக்குதே… அப்புறம் என்னப்பா ஒரு பிளாக்பஸ்டர் பார்சல்…

- Advertisement -

தமிழ் சினிமாவின் தற்போது மோஸ்ட் வான்டெட் நடிகராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அவர், கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ரவி மோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் 90ஸ் கிட்ஸ் களின் பயணத்தை மிக அழகாக காண்பித்து சுவாரசியமாக படத்தை இயக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் அவர் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். இன்றைய நவீன உலகத்தில் செல்போன்களை வைத்திருக்கும் காதலர்கள், அந்த செல்பேசியை ஒருவருக்கொருவர் மாற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்தது. இப்படி இரண்டே இரண்டு திரைப்படங்கள் மூலம் தமிழ் திரை உலகின் உச்சத்திற்கு சென்றார் பிரதீப் ரங்கநாதன். அவருக்கென்று ரசிகர் பட்டாளமும் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்தன.

இப்படியான சூழலில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. படிப்பின் முக்கியத்துவத்தை நகைச்சுவை கலந்த சுவாரஸ்ய திரைப்படமாக இதனை அஸ்வந்த் மாரிமுத்து கொடுக்க அதற்கு ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

- Advertisement -

வெறும் 35 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படியான சூழலில் பிரதிப் ரங்கநாதனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து எல்ஐகே திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதேபோல் டியூட் என்னும் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்கத்தின் பக்கம் கவனம் செலுத்த இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த முறை இயக்கத்தோடு மட்டும் நிற்காமல் நடிக்கவும் செய்கிறார். இதற்காக மூன்றாவது முறையாக ஏஜிஎஸ் நிறுவனத்துடன் அவர் கைகோர்த்துள்ளார். சயின்டிபிக் ஆக்சன் என்டர்டைன்மெண்ட் திரைப்படமாக இது எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்