- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூரில் நடந்த துயர சம்பவம்… 41 பேர் பலியான சோகம், காந்தாரா சாப்டர் 1...

கரூரில் நடந்த துயர சம்பவம்… 41 பேர் பலியான சோகம், காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்த படம் காந்தாரா. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதலில் காந்தாரா கன்னட மொழியில் வெளியாகி அதைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் வெளியாகி 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது.

இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த காந்தாரா படத்தின் முன்பகுதி இப்போது காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் உருவாகி உள்ளது. இது 800ம் ஆண்டுகளில் நடக்கும் கதைக்களத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை மறுநாள் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாக உள்ளது.

- Advertisement -

இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் அவருக்கு நடிகர் மணிகண்டன் பின்னணி குரல் தந்திருக்கிறார். மதராஸி பட நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் தயாரான இந்த படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியாக உள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

காந்தாரா சாப்டர் 1 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் தொடர்ந்து மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களிலும் நடத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் இன்று (30ம் தேதி) பிரமோசன் நிகழ்ச்சி நடத்துவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவித்து இருந்தனர். ஆனால் கடந்த 27ம் தேதி இரவு கரூரில் நடந்த தவெக கட்சி பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த நிலையில் காந்தாரா சாப்ட்வேர் 1 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்.

- Advertisement -

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்திய துரதிஷ்டவசமான சம்பவத்தை கருத்தில் கொண்டு நாளை (இன்று) சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இது பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்க வேண்டிய நேரம் என்று நாங்கள் நம்புகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி. மேலும் தமிழகத்தில் உள்ள எங்கள் பார்வையாளர்களை மிகவும் பொருத்தமான நேரத்தில் சந்திக்க காத்திருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தாரா சாப்டர் 1 படம் தமிழ்நாட்டில் பிரமோஷன் நிகழ்ச்சி எதுவும் இல்லாமலேயே நேரடியாக வரும் 2ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்