- Advertisement -
Homeபொழுதுபோக்குமரணத்தை முன்பே கணித்தாரா சீரியல் நடிகையின் கணவர் அரவிந்த் சேகர்.. பரபரக்க வைக்கும் இன்ஸ்டா போஸ்ட்

மரணத்தை முன்பே கணித்தாரா சீரியல் நடிகையின் கணவர் அரவிந்த் சேகர்.. பரபரக்க வைக்கும் இன்ஸ்டா போஸ்ட்

- Advertisement -

தமிழ்நாட்டில் சீரியல்களுக்கு என்று எப்போதுமே மவுசு இருக்கிறது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படி ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்றுதான் நாதஸ்வரம். மெட்டில் ஒலி எனும் மெகா ஹிட் சீரியலை இயக்கிய திருமுருகன்தான் இந்த சீரியலையும் இயக்கினார். இதில் நடித்து அறிமுகமானவர்தான் ஸ்ருதி சண்முகப்ரியா.

தான் நடித்த முதல் சீரியலே நல்ல ரீச் ஆனதாலும் தன்னுடைய நடிப்பும் பலரையும் கவர்ந்ததாலும் அவருக்கு அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி வாணி ராணி, பாரதி கண்ணம்மா, கல்யாணப் பரிசு போன்ற சீரியல்களில் நடித்தார். நாதஸ்வரம் எப்படி ஹிட்டானதோ அதேபோல்தான் அவர் நடித்த மற்ற சீரியல்களும் ஹிட்டடித்தன. இதன் காரணமாக முன்னணி சீரியல் நடிகையாக உயர்ந்தார் ஸ்ருதி.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழலில் வீட்டாரின் ஏற்பாடுபடி கோவையை சேர்ந்த அரவிந்த் சேகர் என்பவரை கடந்த வருடம் மே மாதம் திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் அவ்வளவு ஜாலியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்துவந்தனர். இரண்டு பேரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் அப்லோட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.அந்த வீடியோக்கள் ட்ரெண்டாகி சோஷியல் மீடியாவில் சுற்றிக்கொண்டும் இருந்தன.

இந்நிலையில் ஸ்ருதி சண்முகப்ப்ரியா வாழ்க்கையில் பெரும் இடி ஒன்று இறங்கியிருக்கிறது. ஆம் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் தனது கணவர் அரவிந்த் சேகரை பறிகொடுத்திருக்கிறார். வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருக்கும்போது அரவிந்த் சேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து பலரும் ஸ்ருதிக்கு தங்களது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துவருகின்றனர்.

- Advertisement -

30 வயதே ஆகும் அரவிந்த் சேகர் கடந்த ஆண்டு நடந்த மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பரிசை தட்டி சென்றார்.மேலும் ஜிம் ஒன்றை சொந்தமாக நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் சேகரின் மறைவை அடுத்து ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உன்னுடைய உடல் மட்டும்தான் என்னைவிட்டு பிரிந்திருக்கிறது. உனது உயிர், மனம், என்னை அரவணைக்கும் பாதுகாப்பு எல்லாம் என்னைத்தான் சுற்றியிருக்கிறது.நாம் இருவரும் சிறந்த தருணங்களை ஏற்கனவே உருவாக்கிவிட்டோம். அதை எப்போது வைத்திருப்பேன். என் அருகில் உனது இருப்பை உணர்கிறேன்” என சோகத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் அரவிந்த் சேகரின் பழைய இன்ஸ்டா போஸ்ட் ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதாவது சில மாதங்களுக்கு முன்னர் அரவிந்த் சேகரும், ஸ்ருதியும் பாரிஸுக்கு சென்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், வீடியோவையும் பகிர்ந்திருக்கும் அரவிந்த, நல்ல நினைவுகளுடன் உயிரிழக்க வேண்டும். நிறைவேறாத கனவுகளுடன் அல்ல என குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை தான் இறக்கப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டதால்தான் இவ்வாறு போஸ்ட் போட்டிருந்தாரோ என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்