- Advertisement -
Homeபொழுதுபோக்குடியூட் திரைப்படத்தை முதலில் நான் நிராகரிப்பேன்... சொன்னது வேறு யாரும் இல்லை படத்தின் நாயகன் பிரதீப்...

டியூட் திரைப்படத்தை முதலில் நான் நிராகரிப்பேன்… சொன்னது வேறு யாரும் இல்லை படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன்தான்…

- Advertisement -

இயக்குனரில் இருந்து நடிகராக அவதாரம் எடுத்தவர்களில் மிக முக்கியமான நட்சத்திரமாக மாறி இருப்பவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது அவர் டியூட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் மமீதா பைஜூ நடித்திருக்கிறார். சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ளார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து, மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. சாய் அபயங்கர் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரீச் ஆகி இருக்கின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படியான சூழலில், பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

- Advertisement -

அதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை நான் இயக்கவில்லை. தற்போது நான் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், அதை என்னால் செய்ய முடியாது. அதேசமயம் எனக்கு அந்த ஆஃபர் வந்ததா என்பதை என்னால் சொல்ல முடியாது. நான் ரஜினிகாந்த் சாரின் தீவிரமான ரசிகன்.

அவரின் அனைத்து திரைப்படத்தையும் முதல் காட்சியில் பார்த்து விடுவேன். லிங்கா படத்திற்காக நள்ளிரவு 12 மணிக்கு சென்று பாலாபிஷேகம் செய்தேன். அடுத்த நாள் தேர்வு இருந்த போதும் நான் திரையரங்கிற்கு சென்று தலைவா என்று அலறினேன். லவ் டுடே திரைப்படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் சார் என்னை பாராட்டிய போது என்னால் எந்த வார்த்தையும் கூற முடியவில்லை.

- Advertisement -

சினிமாவில் நுழைவதற்கு முன்பே, இந்த வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் எல்லாம் ஏன் ஒரே மாதிரியான கதைகளில் நடிக்கிறார்கள், ஏன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என்று யோசித்தேன். தற்போது எல் ஐ கே திரைப்படத்திற்கு பிறகு, நான் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை இயக்கப் போகிறேன். கணிக்கவே முடியாத இந்த கதையில் நீங்கள் ஒரு வித்தியாசமான பிரதிப்பை பார்ப்பீர்கள்.

டியூட் திரைப்படத்தின் ஸ்கிரிப்டை நான் இரண்டு முறை வேண்டாம் என்று கூறினேன். அதில் சில காட்சிகளில் மக்கள் என்னை சிரிப்பாக பார்ப்பார்களோ என்று தோன்றியது. லவ் டுடே திரைப்படத்தை பார்த்த பிறகு எனக்காக அந்த ஸ்கிரிப்ட்டை சற்று மாற்றினார் கீர்த்தீஸ்வரன். பின்னர் அவர் கூறிய ஸ்கிரிப்ட் எனக்கு பிடித்தது. படம் பார்த்த பிறகு அதுதான் டியூட் திரைப்படத்தின் சிறந்த பாகம் என்பது தெரிந்தது. எப்படி கோமாளியில் ரவிமோகன் சார் என்னை நம்பினாரோ அதனைத் தான், கீர்த்தீஸ்வரனுக்கும் நான் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்