- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு செடி வளரும் போது இலைகளை பிய்ச்சு போடறாங்க, ஆனா மரமா அது வளர்ந்தா தடுத்து...

ஒரு செடி வளரும் போது இலைகளை பிய்ச்சு போடறாங்க, ஆனா மரமா அது வளர்ந்தா தடுத்து நிறுத்த முடியுமா? – நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆவேச கேள்வி!

- Advertisement -

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி யோகி பாபு காஜல் அகர்வால் ஆர்ஜே ஆனந்தி கேஎஸ் ரவிக்குமார் பொன்னம்பலம் வினோதினி வைத்யநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப் படமாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கோமாளி படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி நடித்த படம்தான் லவ் டுடே. இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. காதலர்களின் மொபைல் போன் ரகசியங்களால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை காமெடி கலந்து சொன்ன படமாக இது இருந்தது. மாஸ் ஹிட் படமாகவும் அமைந்தது.

- Advertisement -

லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின் கௌதம் மேனன் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை 21ம் தேதி ரிலீஸாகிறது. நாளை தான் தனுஷ் இயக்கிய நீக் படமும் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த டிராகன் படம் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் மேடையில் பேசியதாவது, என்னை சிலர் அடிக்கவும் செய்றாங்க. அதை எல்லாம் நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஆனா அவங்க யார், எதுக்கு ஏன் அவங்க அப்படி பண்றாங்கன்னு அதுக்குள்ள நாம போக வேணாம். ஆனா அவங்களுக்கு நான் சொல்ல விரும்பறது ஒண்ணே ஒண்ணுதான்.

- Advertisement -

ஒரு செடி வளரும்போது சிலர் அந்த செடியின் இலையை பிய்ச்சு போட்டுட்டு போவாங்க. காம்பை உடைச்சு போட்டுட்டு போவாங்க. சில பேர் மிதிச்சுட்டும் போவாங்க. ஆனால் அந்த டைம்ல எல்லாம் அந்த செடியோட வேர் நிலத்துக்கு அடியில் வளர்ந்துக்கிட்டுதான் இருக்கும்.

அது ஸ்டராங்கா நிலத்துக்குள்ளே ஆழமா போயிட்டேதான் இருக்கும். அது மட்டும் அந்த வலியை எல்லாம் தாங்கிடுச்சுன்னா அதுக்கு அப்புறம் அந்த செடி ஒரு பெரிய மரமாக வளர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நேரத்துல அந்த செடிக்கு தண்ணீர் ஊத்துகிற எல்லோருக்கும் நன்றி என்று அந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதன் வளர்ச்சிக்கு தடையாக சினிமாவில் இருப்பது யார், யாரைப் பற்றி அவர் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்