- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 படத்துல இவங்களும் நடிக்கறாங்களா?, ஏம்பா அந்த சர்ச்சை நாயகனை எதுக்குப்பா ஆட்டத்துல...

விடுதலை 2 படத்துல இவங்களும் நடிக்கறாங்களா?, ஏம்பா அந்த சர்ச்சை நாயகனை எதுக்குப்பா ஆட்டத்துல சேர்த்தீங்க – அவரு அலப்பரை தாங்க முடியாதே

- Advertisement -

காமெடி நடிகராக இருந்த சூரியை கதாநாயகனாக்கியவர் வெற்றிமாறன். இந்தாண்டு துவக்கத்தில் வந்த விடுதலை படத்தில், குமரேசன் என்ற கான்ஸ்டபிள் வேடத்தில், மிக சிறப்பான நடிப்பை தந்திருந்தார் சூரி. இந்த படத்தின் 2ம் பாகம் அடுத்த ஆண்டில் வெளிவர இருக்கிறது. 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விடுதலை படத்தில் இளையராஜாவின் இசை, படத்துக்கு மிகப்பெரிய வலுவை தந்தது. மலைவாழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் புரட்சிப்படை தலைவராக வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பு, இந்த படத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அத்துடன் போலீஸ் உயரதிகாரி கேரக்டரில் கொடூரமாக நடித்த சேத்தன் நடிப்பும் பாராட்டைப் பெற்றது.

- Advertisement -

விடுதலை 2 பாகத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்ட நடிகர் சூரி, அடுத்து தேனி மாவட்டத்தில் நடந்துவரும் கருடன் படப்பிடிப்பில் பிஸியாக 3 மாதங்களுக்கு மேலாக நடித்து வருகிறார். ஆனால், விடுதலை 2 படத்தின் படிப்பிடிப்பு நீண்டும் முடிவடையாமல் நீண்டுகொண்டே போவதாக கூறப்படுகிறது.

அதனால் இந்தியன் 2 எடுக்கப் போய் இந்தியன் 3 உருவானது போல, விடுதலை 2 எடுத்து, அது விடுதலை 3 ஆக மாறிவிட்டதா என ரசிகர்களுக்கும், படப்பிடிப்பு குழுவுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், விடுதலை 2 மட்டும்தான். விடுதலை 3 எல்லாம் கண்டிப்பாக இல்லை என வெற்றிமாறன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு மட்டும் இரவு பகலாக நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

இப்போது விடுதலை 2 படப்பிடிப்பில், விஜய் சேதுபதி, மஞ்சுவாரியார் இடம்பெற்ற பிளாஸ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் டீஏஜிங் முறையில், விஜய் சேதுபதி வாலிப தோற்றத்தில் காட்சியளிக்கும் வகையில் படம் எடுக்கப்படுகிறது. இந்த தோற்றத்தில் தான் சமீபத்தில், அமீர் காபி ஷாப் திறப்பு விழாவில் விஜய் சேதுபதி பங்கேற்றுள்ளார்.

இப்போது விடுதலை படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். மேலும், விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில்தான் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் என்ற புதுப்படத்தில் இவர் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் துவக்க விழாவில், விஜய் சேதுபதி மகன் சூர்யா, மிகவும் தெனாவெட்டாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் விடுதலை 2 படத்தில் அவர் நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்