நடிகர் விஜய் நடிப்பில், கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த அதிரடி ஆக்சன் படம் கில்லி. இந்த படத்தை டைரக்டர் தரணி இயக்கி இருந்தார். இந்த படத்தில் திரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி கணேஷ், ஜெனிபர், தாமு, பிரகாஷ்ராஜ், பாண்டு, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்தன.
தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கில்லி படம் மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்துள்ளது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி ரி ரிலீஸ் ஆன இந்த படம், இப்போதும் தியேட்டர்களில் சக்கை போடு போட்டு வருகிறது. பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.
சமீபத்தில் வெளியான ரத்னம், அரண்மனை 4 படங்கள் கூட கில்லி படம் வெளியான தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல், மற்ற தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற கில்லி படத்தின் வசூல் அதிரடியாக இருந்து வருகிறது. கில்லி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்த தீனா, மங்காத்தா, பில்லா உள்ளிட்ட படங்கள் மே 1ம் தேதி களத்தில் இறக்கப்பட்டன.
இதையடுத்து அடுத்த கட்டமாக சூர்யா நடித்த கஜினி, தனுஷ் நடித்த தேவதையை கண்டேன், அதேபோல் கமல் நடித்த நாயகன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கில்லி படத்தில் மிகப்பெரிய ஒரு கேரக்டராக ரசிகர்களால் பாராட்டப்பட்டது முத்துப்பாண்டி கேரக்டர். மதுரை முத்துப்பாண்டியாக நடித்திருந்தவர் பிரகாஷ்ராஜ். இவர் திரிஷாவை கடத்திக் கொண்டு போகும்போதுதான், விஜய் அவரை அடித்து விட்டு மதுரையிலிருந்து திரிஷாவை சென்னைக்கு அழைத்து வருவார் படத்தின் மையக் கருவே அதுதான்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கில்லி படத்தில் விஜய் தான் வில்லன். அதாவது தனலட்சுமி நான்தான் லவ் பண்ணினேன். அவன் வந்து கூட்டிட்டு போவான். தனலட்சுமி மேல ஒரு சின்ன கீறல் கூட விழக்கூடாதுன்னு நான் நெனச்சேன். அவன்தான் படத்துல தனலட்சுமி கழுத்துல கத்தியை வச்சான். கில்லி படம் நடிக்கும் போது நான் ஹீரோ, திரிஷா ஹீரோயின், விஜய் தான் வில்லன் என்று பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பிரகாஷ்ராஜ் வித்யாசமாக பேசியிருப்பதால், விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட கடுப்பில் இருந்து வருகிறார்கள். கில்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிரகாஷ்ராஜ் நடித்த முத்துப்பாண்டி கேரக்டர் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே நேரத்தில் கதாநாயகன் விஜயை, வில்லன் என்று அவர் குறிப்பிடுவதும் வில்லனாக அவர் நடித்துவிட்டு நான்தான் கதாநாயகன் என்று கூறுவதும் விஜய் ரசிகர்களை அப்செட்டாக செய்துள்ளது. கண்டபடி விஜய் ரசிகர்கள் பிரகாஷ்ராஜை திட்டி வருகின்றனர்.





