- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யப் போகும் தரமான சம்பவம், இந்த டிவிஸ்ட்டை யாருமே...

ரஜினி 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யப் போகும் தரமான சம்பவம், இந்த டிவிஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கலையே ப்ரோ – வேற லெவல் போங்க!

- Advertisement -

இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கத்தில் இப்போது ரஜினி 170 படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு 3ம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தை பொருத்த வரை அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சுவாரியர் என மெகா ஸ்டார்கள் இணைகிற படமாக இருக்கிறது.

இந்த படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படப்பிடிப்பு வரும் 2024 மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ துவங்க உள்ளது. இதற்கான ப்ரீ புரடக்‌ஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். திரைக்கதை மற்றும் படத்தில் நடிக்கும் கேரக்டர்கள் குறித்த தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

ரஜினி 171 படத்தில், வில்லனாக நடிப்பது ராகவா லாரன்ஸ் என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது. மற்றொரு முக்கிய கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பதும் உறுதியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. தளபதி படத்துக்கு பிறகு 32 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைய உள்ளது, ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

மாநகரம் படம், லோகேஷ் கனகராஜின் முதல் படம். அந்த படத்தை பார்த்த பலரும், அவரை தேடிப்போய் பாராட்டும் அளவுக்கு அந்த படம் மிக சிறப்பானதாக இருந்தது. அதே போல் கைதி, விக்ரம் படங்களும் சர்வதேச படங்களாக ரசிக்கப்படும் ஆக்சன் படங்களாக இருந்து, லோகேஷ் கனகராஜூக்கு பெருமை தேடித்தந்தது. ஆனால், லியோ அவருக்கு ஆத்ம திருப்தி அளிக்கவில்லை. ரசிகர்களும் ஏமாந்துதான் போயினர்.

- Advertisement -

அதனால் ரஜினி 171 படத்தை வேற லெவலில் கொண்டுவரும் ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் லோகேஷ். அதாவது இதுவரை சொல்லாத பாணியில், சொல்லாத கோணத்தில் யாரும் எதிர்பார்க்காத காம்பினேஷனில் நட்சத்திரங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் இறக்கிவிட முடிவு செய்திருக்கிறார்.

அதே போல் மற்றொரு முக்கிய முடிவிலும் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அதாவது ரஜினியை இந்த படத்தில் வில்லத்தனமாக கேரக்டரில் காட்ட முடிவு செய்திருக்கிறார். அவரது வில்லத்தனமான நடிப்பை அதிகமாக ரசிக்கும் லோகேஷ், அதுபோன்ற கேரக்டர்களில் ரஜினியின் மாறுபட்ட தன்மை வெளிப்படும். அந்த ரஜினியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் நான் இயக்கும் படத்தில் முடிந்த வரை அந்த வில்லத்தனமான ரஜினியை கொண்டு வருவேன், என சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சற்று முன்