- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் 55வது படம், இதில் டாப் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கப்...

இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் 55வது படம், இதில் டாப் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கப் போவது விஜய் பட நடிகையா? – போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் டாப் ஸ்டார் நடிகராக இருந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமான பிரசாந்த் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். குறிப்பாக ஜீன்ஸ் ஜோடி ஆணழகன் மன்னவா பார்த்தேன் ரசித்தேன் விரும்புகிறேன் அப்பு குட்லக் தமிழ் கண்ணெதிரே தோன்றினாள் என பல படங்களை சொல்லலாம்.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் 1980களில் பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தவர். அவர் நடித்த நீங்கள் கேட்டவை கொம்பேறி மூக்கன் மலையூர் மம்பட்டியான் தீச்சட்டி கோவிந்தன் போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. பிறகு பல படங்களில் தியாகராஜன் வில்லன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் அஜீத்குமார் போல முன்னணி நடிகராக வலம் வர வேண்டிய நடிகர் பிரசாந்த், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரது இமேஜ் பாதிக்கப்பட்டது. மனைவி கிரஹலட்சுமியை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் நடிக்காமல் பல ஆண்டுகள் இடைவெளி விட்ட நிலையில் தற்போது தனது 2வது சுற்றை ஆரம்பித்திருக்கிறார்.

தி கோட் படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த பிரசாந்த், அதே இளமை அழகு துடிப்புடன் 51 வயதிலும் இருந்தது ரசிகர்களை ஆச்சரியம் தந்தது. மேலும் அவர் நடித்த அந்தகன் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தியாகராஜன் டைரக்ட் செய்திருந்தார். பிரசாந்த் கார்த்திக் சிம்ரன் பிரியா ஆனந்த் கேஎஸ் ரவிக்குமார் ஊர்வசி யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் அடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே 2002ம் ஆண்டில் நடிகர் பிரசாந்த் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தமிழ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். பிரசாந்த் வடிவேலு காமெடி காட்சிகள் இந்த படத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இப்போது 23 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்த் நடிக்கும் அவரது 55வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பீஸ்ட் ஜனநாயகன் ரெட்ரோ காஞ்சனா 4 படங்களை தொடர்ந்து பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். கூலி படத்திலும் ஒரு ஐட்டம் பாட்டுக்கு பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்