- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் ஓகே சொன்ன பிரேமலதா, பின்னர் நோ சொன்னது ஏன், கேப்டன் குறித்து அவர்...

முதலில் ஓகே சொன்ன பிரேமலதா, பின்னர் நோ சொன்னது ஏன், கேப்டன் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் பின்னணி இதுதானா? – அப்செட் ஆன தி கோட் படக்குழு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தன்னிகரில்லாத ஒரு இடத்தில் இருந்தவர் நடிகர் விஜயகாந்த். துவக்கத்தில் புரட்சிக்கலைஞர் என்றும் பின்னாளில் கேப்டன் என்றும் அழைக்கப்பட்ட விஜயகாந்த், சிறந்த நடிகர் மட்டுமின்றி, சிறந்த மனிதராகவும் தமிழக மக்களால் நேசிக்கப்பட்டவர். உதவி என்று வந்தவர்களுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளலாக இருந்தவர். யாரும் பசியுடன் இருக்க கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டவர்.

சினிமா நடிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் தமிழக மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு பெரிய அரசியல் ஆளுமைகளை எதிர்த்து, தமிழ்நாட்டில் அரசியல் செய்தவர். நேருக்கு நேராக அவர்களுடன் அரசியல் களத்தில் மோதிய துணிச்சல்காரர். அதில் அவர் பெரிய வெற்றிகளையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் தமிழக சட்டசபையில் திமுகவை 3ம் இடத்துக்கு தள்ளிவிட்டு, 2ம் இடத்துக்கு முன்னேறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த சட்டசபையில், தமிழக எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தவர். ஆனால் அரசியலில் தொடர்ந்து அவர் செயல்பட முடியாமல் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த மண்ணை விட்டு மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்.

அவரது மறைவுக்கு பிறகு, அவரை கௌரவிக்கும் விதமாக, அவரை பெருமைப்படுத்தும் முறையில் ஏஐ தொழில் நுட்பத்தில் விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட்) படத்தில் விஜயகாந்த் நடிக்கும் ஒரு நிமிட காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதாவிடம் ஏற்கனவே பேசி அனுமதி வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் இப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரேமலதா, ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடித்திருப்பதாக சில படங்களின் அறிவிப்புகள் வெளிவருகின்றன. எங்களிடம் முறையான அனுமதி பெறாமல் அப்படி எந்தவிதமாகவும் விஜயகாந்தை பயன்படுத்த கூடாது. எங்களிடம் அப்படி யாரும் இதுவரை அனுமதி வாங்கவில்லை. அதனால் இதுபோன்ற தவறான தகவல்களை ஊடகங்களில், எங்கள் அனுமதியின்றி வெளியிடக் கூடாது என்று கூறியிருந்தார்.

இது மிகப்பெரிய அதிர்வலைகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. துவக்கத்தில் விஜயகாந்த் உடன் நடிக்கவும், விஜயகாந்த் மகன் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் விஜய் வர மறுத்துவிட்டார். இப்போது கேப்டன் மறைந்த பிறகு, அவரை தனது படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்து, தனக்கான ஆதரவை தமிழக மக்கள் மத்தியில் பெருக்கிக்கொள்ள ஆசைப்படுகிறார். அதனால் நடிகராக இருந்த விஜய்க்கு ஓகே சொன்ன பிரேமலதா, தவெக கட்சியின் தலைவராக விஜய், தன் கணவர் விஜயகாந்தின் செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ள, தேமுதிக கட்சி தலைமை நிர்வாகியாக பிரேமலதா அனுமதிக்கவில்லை. அதனால்தான் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்