இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜின் திடீர் மறைவால் தமிழ் சினிமா துறையினரும் ரசிகர்களும் பலத்த சோகத்தில் வேதனையில் இருந்து வருகின்றனர். அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் அவரது சீடர் கே பாக்யராஜ் மறைந்தது பெரிய வேதனையை தமிழ் சினிமா துறையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கோவாவில் நடந்த இயக்குனர் சுந்தர் சி குஷ்பு மகள் அவந்திதா திருமண விழாவில் கே பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் பங்கேற்றுள்ளார். நேற்று இரவு அவர்கள் சென்னைக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை வாக்கிங் சென்ற கே பாக்யராஜ் பாதி வழியில் திரும்பி வீட்டுக்கு வந்த நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கே பாக்யராஜின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வாகனத்தில் இருந்து அவரை உடலை வெளியே கொண்டு வர முடியாமல் ஊடகங்களும் அங்கு இருந்த கூட்டமும் சுற்றி வளைத்துக்கொண்டது. அப்போது வேனுக்குள் இருந்த நடிகை ராதிகா சரத்குமார் டென்சன் ஆகிவிட்டார்.
கே பாக்யராஜூடன் தாவணிக்கனவுகள் பொய் சாட்சி இன்று போய் நாளை வா உள்ளிட்ட 3 படங்களில் நடித்தவர் ராதிகா. அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்த வந்த நிலையில் அவரது திடீர் மறைவால் ராதிகா மிகவும் உடைந்து போயுள்ளார். இந்த சூழலில் கே பாக்யராஜின் உடலை வாகனத்தில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் ஊடகங்கள் சூழ்ந்து கொண்டதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அப்போது வேனுக்குள் இருந்த ராதிகா அங்கிருந்தவர்களை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது ராதிகா பேசுகையில், உங்களை கையெடுத்து கும்பிடுறேன். இங்கே வேண்டாம். உங்களுக்கு டிராமா வேண்டும் டிஆர்பி வேண்டுமென்றால் நாங்கள் தனியாக நடித்து தருகிறோம்.
தயவு செய்து எங்களுக்கு கொஞ்சம் பிரைவசி கொடுங்கள் சார். தயவு செய்து இந்த சாவினை சா்க்கஸ் ஆக்காதீங்க என்று கெஞ்சி கேட்டு இருக்கிறார். கடந்த முறை இயக்குனர் பாரதிராஜா மறைவின் போது தேனியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது ஊடகங்கள் அங்கு நடந்த சில குடும்ப விஷயங்களை பெரிதாக்கியது குறிப்பிடத்தக்கது.





