- Advertisement -
Homeபொழுதுபோக்குச்சே... குட் பேட் அக்லியின் அந்த அசத்தலான வாய்ப்பை தவறவிட்டு விட்டேன்... புலம்பும் இளம் நட்சத்திரம்......

ச்சே… குட் பேட் அக்லியின் அந்த அசத்தலான வாய்ப்பை தவறவிட்டு விட்டேன்… புலம்பும் இளம் நட்சத்திரம்… இப்ப சொல்லி என்ன பிரயோஜனம்…

- Advertisement -

கடந்த 10 ஆம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழுக்க மாஸ் திரைப்படத்தை பார்த்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஆதிக் ரவிச்சந்திரன். லாஜிக் எதையும் கண்டு கொள்ளாமல், முழுக்க முழுக்க அஜித்தை பிரதானப்படுத்தியே அவர் இந்த கதையை எடுத்து இருக்கிறார். அது சரியாக ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது. அஜித் ரசிகர்களை கடந்து பலருக்கும் இந்த திரைப்படம் பிடித்துப் போய் இருக்கிறது.

- Advertisement -

இதனால் திரையரங்குகளில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. படத்தில், கேமியோ ரோலில் வருகிறார் சிம்ரன். அவர் இன்ட்ரோ ஆகும் போது வாலி திரைப்படத்தின் பாடலை ஒலிக்கவிட்டு இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அது மட்டுமல்ல இன்னும் பல ரெட்ரோ பாடல்கள் படத்தில் உள்ளன.

ஒத்த ரூபாய் தாரேன், சுல்தானா, ஆலுமா டோலுமா, சகலகலா வல்லவன் என ஏகப்பட்ட பாடல்கள் படத்தில் இருக்கின்றன. தந்தைக்கு மகனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என நினைக்கும் டான் அஜித், செய்த தவறை ஒத்துக் கொண்டு சிறைக்கு செல்கிறார்.

- Advertisement -

தண்டனை காலம் முடிவதற்கு முன்பே தனது மகனுக்கு ஆபத்து என தெரியவர அவர் ஸ்பெயின் செல்கிறார். இதன்பிறகு நடப்பது தான் குட் பேட் அக்னி திரைப்படத்தின் கதை. இதில் அஜித்தின் மகனாக கார்த்திகேயா தேவ் என்பவர் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே சலார் படத்தில் நடித்திருந்தார். முதலில் இந்த கேரக்டருக்கு பிரேமலு திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த நஸ்லேன்னை தேர்வு செய்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஆனால் பிற படங்களில் கமிட்டாகி இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. தற்போது அவர் நடிப்பிலும், ஆலப்புழா ஜிம்கானா படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. குட் பேட் அக்லியில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் இரண்டு செட்யூலாக எடுக்கப்பட இருந்ததால் தன்னால் பங்கு பெற முடியவில்லை என்றும் கூறியிருந்தார். பெரிய வாய்ப்பை தான் மிஸ் செய்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் பிரேமலு நாயகன் நஸ்லேன்.

- Advertisement -

சற்று முன்