- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி… ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட...

நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி… ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பதிவு!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமானவர். இப்போது அவர் 2025ம் ஆண்டில் சினிமாவில் தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த சாதனையை பாராட்டி அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் ரஜினிக்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்று சிறப்புமிக்கது.

அவரது நடிப்பில் பலவகையான கதாபாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய மோடி ஜி உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நான் மிகவும் நன்றி உடையவன். நீண்ட காலமாக மிக உயர்ந்த மரியாதையை வைத்திருக்கும் ஒரு தலைவரிடம் இருந்து இவற்றை பெறுவது உண்மையிலேயே கௌரவமாகும். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் அதில் கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார். தன்னுடைய வலைதள பக்கத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 மகத்தான ஆண்டுகள் திரை உலகில் நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள். அவரது அற்புதமான திரை பயணத்தில் தனது பிரமிக்க வைக்கும் நடிப்பால் மில்லியன்கணக்கானவர்களை மகிழ்வித்தது மட்டுமின்றி தனது திரைப்படங்களை சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாகவும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

அவரது படைப்புகள் சமூகத்தில் முக்கியமான பிரச்சனைகளை பற்றி சிந்திக்க வைத்து எண்ணற்ற உயிர்களை, அர்த்தமுள்ள மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கையை பெற்றுள்ளன. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பதிவில் கூறியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இப்போது கூலி படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சற்று முன்