- Advertisement -
Homeபொழுதுபோக்குலண்டனில் வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜா - மகத்தான சாதனை என நேரில் வாழ்த்திய...

லண்டனில் வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜா – மகத்தான சாதனை என நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் இசைஞானி என கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இதுவரை 1300க்கும் மேற்பட்ட படங்கள், பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர். சமீபத்தில் லண்டனில் வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு தமிழக அரசு விரைவில் அரசு விழாவாக பாராட்டு விழா நடத்த உள்ளது.

கடந்த 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் உலகத் தரம் வாய்ந்த இசைக் கலைஞர்களை கொண்ட ராயல் பில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா உதவியுடன் வேலியன்ட் சிம்பொனியை இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்து பாராட்டுகளை வாழ்த்துகளை பெற்று வருகிறார். 13 நாடுகளில் இந்த சிம்பொனியை அரங்கேற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

வேலியன்ட் சிம்பொனியை டவுன்லோடு செய்து ரசிகர்கள் கேட்டால் அதை முழுமையாக உணர்வுபூர்வமாக உணர முடியாது. லண்டனில் 80 இசைக்கலைஞர்கள் பங்கேற்று உயிரோட்டமாக இசைக்கருவிகளை வாசித்து உருவாக்கிய அந்த வேலியன்ட் சிம்பொனியை நேரடியாக கேட்டால் மட்டுமே அது தனித்துவமாக இருக்கும் என்றும் இசைஞானி ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் ராஜ்ய சபா எம்பி ஆக உள்ள இசைஞானி இளையராஜா, பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். நேற்று டில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்ட இளையராஜா, பிரதமர் மோடியை சந்தித்தது எனக்கு மறக்க முடியாத ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

- Advertisement -

எனது சிம்பொனி வேலியன்ட் உள்பட பல விஷயங்களை நாங்கள் பேசினோம். அவரது ஆதரவு மற்றும் பாராட்டுகளால் நான் மிகவும் பணிவு கொள்கிறேன் என்று அந்த பதிவில் இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார். அதே போல் பாரத பிரதமர் மோடியும் இளையராஜா குறித்த பதிவு ஒன்றை செய்து அதில் அவரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் ராஜ்யசபா எம்பி இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி. சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியின் வேலியண்ட்டை அரங்கேற்றியதன் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கினார். இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது. இந்த மகத்தான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது என்று பிரதமர் பிரதமர் மோடி அந்த பதிவில் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்