- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தில் நடிக்கப் போகும் வில்லன் யார் தெரியுமா -...

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தில் நடிக்கப் போகும் வில்லன் யார் தெரியுமா – கண்டிப்பா இதை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

- Advertisement -

இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது, ரஜினி 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், திருவனந்தபுரம், திருநெல்வேலி, பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில், முதல் ஷெட்யூல் நடந்து முடிந்தது. இதில் பங்கேற்று விட்டு, ரஜினிகாந்த் சென்னை திரும்பி இருக்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளதாக தெரிகிறது.

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி 170 படத்தில், ரஜினி நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தை பொருத்தவரை, படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான ஒருவர் வில்லனாக நடித்த விநாயகம்தான். மிகச்சிறந்த ஒரு மிரட்டலான நல்ல நடிப்பை அவர் வழங்கியிருந்தார். படத்தில் ரஜினியை போலவே, வில்லன் விநாயகம் நடிப்பை ரசித்த ரசிகர்களும் ஏராளம்.

- Advertisement -

ஒரு படத்தை பொருத்தவரை, அதுவும் ஆக்சன் படமாக இருக்கும் பட்சத்தில், ஹீரோவை எதிர்க்கும் வில்லன், ஹீரோவை காட்டிலும் திறமைசாலியாக, வலிமையானவனாக, குறிப்பாக ஹீரோவை எதிர்க்கும் அளவுக்கு பயங்கர வில்லத்தனங்களை நிறைந்தவனாக காட்டப்பட வேண்டும். அப்போதுதான் வில்லனை வெல்வது ஹீரோவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் விறுவிறுப்பை அதிகப்படுத்தி, படத்தை ரசிக்க வைக்கும்.

அதனால்தான் ரஜினி படங்களில் பெரும்பாலும் ரகுவரன் வில்லனாக இருந்தார். அதே போல், கமலுக்கு நாசர் பிரதான வில்லனாக இருந்தார். பெரும்பாலும் ரஜினி, கமல் படங்களில் இவர்கள் இருவர் மட்டுமே பிரதான வில்லன்களாக ஹீரோக்களை எதிர்த்தனர். அதுபோல், மிகவும் எதிர்பார்க்கப்படும் பெரிய ஹீரோக்களுக்கு வில்லன்களை தேர்வு செய்வதில், இயக்குநர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தில், வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்க வைக்கலாம் என்று திட்டமிடப்பட்டு உள்ளது. பகத்பாசில் ஏற்கனவே நிறைய தமிழ் படங்களில் நடித்து வருவதால், அவரை தவிர்த்து பிருத்விராஜை நடிக்க வைக்கலாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருப்பது உறுதியாகி உள்ளது. சலார் படத்தில் பிருத்விராஜின் மிரட்டலான வில்லன் நடிப்பு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிருத்விராஜை, ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைப்பது குறித்து ரஜினியிடம் கலந்து பேசிவிட்டு, அவர் சம்மதம் தெரிவித்துவிட்டால், பிருத்விராஜிடம் பேச்சு வார்த்தை நடத்த இயக்குநர் திட்டமிட்டுள்ளார். பிருத்விராஜ், இவர் ஏற்கனவே தமிழில் கனா கண்டேன், சத்தம் போடாதே, மொழி, அபியும் நானும், வெள்ளித்திரை, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பதால், தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகர்தான்.

- Advertisement -

சற்று முன்