தமிழ் சினிமாவில் இசை சக்கரவா்த்தியாக 45 ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார் இசைஞானி இளையராஜா. ‘மச்சானை பார்த்தீங்களா, மலைவாழை தோப்புக்குள்ள’ என, அன்னக்கிளி படத்தில் இடம்பெற்ற முதல் பாடலிலேயே ரசிகர்களின் மனதை வசீகரித்தார். அன்று முதல் இன்று வரை இளையராஜா இசை சக்கரவர்த்தியாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கிறார்.
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில், ஆர்டி பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் என 3 பேருமே, பாவலர் சகோதர்கள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டங்களில் இசைக்கச்சேரி நடத்தியவர்கள். பாஸ்கர் கம்யூனிஸ்ட் கட்சி மீது விருப்பம் கொண்டவர். ஒரு கட்டத்தில் மலேரியா இன்ஸ்பெக்டராக இருந்த பாரதிராஜா, பாவலர் சகோதரர்களுடன் பரிச்சயமாகி, பின்பு நெருங்கிய நண்பரானார்.
அதன்பிறகு சினிமா டைரக்டராக பாரதிராஜா சென்னை வர, அவருக்கு பின்னால் இளையராஜா, கங்கை அமரனும் வந்துவிட்டனர். அதன்பிறகுதான் பஞ்சு அருணாசலத்தின் அன்னக்கிளி படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு இளையராஜாவுக்கு கிடைத்தது. அதன்பிறகு இளையராஜா, பல படங்களுக்கு இசையமைத்தார். பல சாதனைகளை படைத்தார். வெற்றிகளை குவித்தார். விருதுகளுக்கு பெருமை சேர்த்தார்.
தற்போது இசையால் சாதித்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கின்றனர். இதில் இளையராஜா கேரக்டரில் நடிக்க தனுஷ் கமிட் செய்யப்பட்டுள்ளார். படத்தை இளையராஜா தயாரிப்பதால் படத்தின் இயக்குநர்களாக அருண் மாதேஸ்வரன், மாரி செல்வராஜ் ஆகியோரை தனுஷ், இளையராஜாவிடம் பரிந்துரை செய்தார். அதில் அருண் மாதேஸ்வரனுக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் இளையராஜா.
இதற்காக தன்னுடன் இரண்டு மாதங்கள் அருண் மாதேஸ்வரனை இருக்க சொல்லியிருக்கிறார் இளையராஜா. அப்போதுதான் தன்னுடைய அன்றாட பழக்க வழக்கங்கள், நடைமுறை, பழகும் விதம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி 2 மாதங்களில் எனக்கு நடந்த அனுபவங்களை எல்லாம் சொல்கிறேன். அதை வைத்து ஸ்கிரிப்ட் ரெடி செய்யுங்கள் என்றும் கூறியிருக்கிறார் இளையராஜா. அதனால் இளையராஜாவுடன் எப்போதும் இருக்கிறார் டைரக்டர் அருண் மாதேஸ்வரன்.
இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிக்க நடிகர் தனுஷ்க்கு ரூ. 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் இளையராஜாவிடம் இருந்து ரூ. கோடி சம்பளம் பெற முடியுமா என பலரும் சந்தேகித்த நிலையில், படத்தை தயாரிக்க போவது மும்பையை சேர்ந்த ஒரு பட நிறுவனம். இளையராஜாவின் வாழ்ககை வரலாறு படம் என்பதால், அதில் பங்குதாரராக இளையராஜா சேர்க்கபட்டு இருக்கிறார். இளையராஜா பேனரில் படம் வெளியாகிறது. மற்றபடி மும்பை தயாரிப்பாளர் மூலமே தனுஷ் சம்பளம் தரப்படுவதாக தெரிய வந்துள்ளது.





