- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள படங்களை வாழ வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்; 25 நாட்களில் ஆடுஜீவிதம் படத்தின் வசூல்...

மலையாள படங்களை வாழ வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்; 25 நாட்களில் ஆடுஜீவிதம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல படங்களை வரவேற்கவும், ஆதரவு தரவும் எப்போதும் தவறுவதில்லை. ரசிகர்களை பொறுத்தவரை நடிகர்களை காட்டிலும் கதைக்குதான் முக்கியத்துவம். நல்ல கதை என்றால் யார் நடித்திருந்தாலும், அந்த படங்களை வெற்றி பெற செய்வார்கள்.

கடந்த 1980களின் பிற்பகுதியில் ரஜினி நடித்த மனிதன், கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படங்கள் வெளியானது. அப்போது அவர்கள் இருவரும்தான் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருந்தனர். ஆனால் அதே காலகட்டத்தில் கிராமத்து நாயகன் நடிகர் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படம் வெளியானது. மனிதன், அபூர்வ சகோதரர்கள் படங்களை கடந்து கரகாட்டக்காரன் படம் வசூலில் அசகாய சாதனை புரிந்தது.

- Advertisement -

இதற்கு காரணம் நடிகர் முக்கியம் இல்ல, அந்த படமும் அது ரசிகர்களின் மனதை ஆழகான சென்று தொடும் விதமும்தான். சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் மிகவும் உச்சத்துக்கு போய்விட்டது. இப்போதைய இயக்குனர்கள் எல்லாம் ஹீரோக்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படங்களைத் தான் தருகிறார்களே தவிர, நல்ல கதை நல்ல கலையம்சம் கொண்ட படங்களைத் தருவதில்லை.

இதன் காரணமாக தமிழ் சினிமா என்றாலே, நடிகர்கள் புகழ் பாடும் கூடங்களாக மாறிவிட்டன. குறிப்பாக ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் போன்றவர்களை ஏதோ தெய்வப் பிறவிகளைப் போல திரையில் பார்க்கும் அளவுக்கு அவர்களை, பில்டப் செய்து காட்டி ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

அதே நேரத்தில் கதைகளை நம்பி மட்டுமே படம் எடுப்பது என்பதுதான் மலையாள சினிமாவில் அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், துல்கர் சல்மான், பிருத்விராஜ் என யாராக இருந்தாலும், மலையாள சினிமாவைப் பொறுத்த வரை கதை தான் நாயகன். கதைக்கு பிறகுதான் நடிக்கும் கதாபாத்திரம் என்பதுதான் மலையாள சினிமாவின் பார்முலாவாக இருக்கிறது.

மலையாள சினிமா ரசிகர்களை பொறுத்தவரை படங்களைத் தான் ரசிப்பார்களே தவிர, நடிகர்களை கொண்டாட மாட்டார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் கதையை கோட்டை விட்டுவிடுவார்கள். நடிகரை கொண்டாடுவார்கள். இதுதான் இங்குள்ள மிகப்பெரிய பிரச்னை. அதனால் தான் பிரேமலு, பிரமயுகம், ஆடுஜீவிதம், மஞ்சும்மெல் பாய்ஸ் எனத் தொடர்ந்து மலையாள படங்கள் ஜெயித்து வருகின்றன. இதில் 3 வாரங்களுக்கு முன் வெளியான பிருத்திவிராஜ் நடித்த ஆடுஜீவிதம் படம், 25 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வரும் நாட்களில், ஆடுஜீவிதம் மிக எளிதாக 200 கோடி ரூபாய் வசூலிக்கும். இதற்கு முன்வந்த மஞ்சும்மெல் பாய்ஸ் 225 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்