மலையாள சினிமா எப்போது யதார்த்த கதைகளை கொண்ட படங்களாக இருக்கின்றன. அதனால் மலையாள திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதைகளை நம்பி அவர்கள் படம் எடுப்பதுதான்.
மலையாள சினிமாவை பொருத்த வரை கதைக்கு தான் கதாநாயகனே தவிர கதாநாயகனுக்கான கதைகளை எந்த இயக்குனரும் உருவாக்குவதில்லை. யதார்த்தமான கதைக்களத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய இயல்பான கதைகளையே, மலையாள படங்கள் எப்போதுமே வெளிப்படுத்துகின்றன.
அதனால் மலையாள படங்களுக்கு இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. மலையாளத்தில் உருவாகும் சில நல்ல படங்கள், சிறந்த படங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் திரிஷியம். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
திரிஷியம் படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டு ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது. இதில் இந்தியை தவிர மற்ற மொழிகளில் எல்லாம் திரிஷியம் படம் பெரிய வெற்றியை பெற்றது. திரிஷியம் 2ம் பாகம் அதேபோல் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இப்போது திரிஷியம் 3ம் பாகத்துக்கான பணிகளை படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் செய்து வருகிறார்
திரிஷியம் படத்தின் முதல் பாகம் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் கௌதமி நடித்திருந்தனர். தமிழில் பாபநாசம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் திரிஷியம் 2ம் பாகம் கொரோனா தொற்றுக்காலத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது திரிஷியம் படத்தின் 3ம் பாகம் உருவாகும் பணியில் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக திரிஷியம் 3ம் பாகத்தோடு படம் முடிவடையும் என்று ஜீத்து ஜோசப் அறிவித்த நிலையில், இப்போது அவர் திரிஷியம் 3ம் பாகத்துக்கு பிறகு திரிஷியம் 4ம் பாகமும் உள்ளது. ஆனால் அதோடு நான் திரில்லர் கதைகளை இயக்குவதில் இருந்து விடை பெற உள்ளேன் என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியிருக்கிறார். மேலும் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் தமிழ் படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.





