லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “லியோ” திரைப்படமானது வரும் அக்டோபர் மாதம் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து விஜய் அடுத்ததாக “தளபதி 68” படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். ஏற்கனவே விஜய் அரசியலில் தீவிரமாக களமிறங்க போகிறார் என்று பேசப்பட்டு வரும் வேளையில் இந்த படம் விஜய்க்கு அரசியலுக்கு முன்னர் கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு மற்றும் விஜய் ஆகியோரது கூட்டணியில் உருவாக இருக்கும் முதல் படம் இது என்பதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அஜித் குமாரை வைத்து மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்த வேளையில் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யுடன் வெங்கட் பிரபு ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

அதனால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் ஜோதிகா ஆகியோர் இணையயிருக்கும் அந்த தகவலை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் அவரது இடத்தில் பிரியங்கா மோகன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா மோகன் தற்போது கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது அவரே விஜயுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் நிச்சயம் அதனை அவர் தவற விட மாட்டார் என்றும் பிரியங்கா மோகன் நிச்சயம் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.





