- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பது ஓகே தான், ஆனால் அந்த 10 பேரை தமிழக முதல்வர்...

அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பது ஓகே தான், ஆனால் அந்த 10 பேரை தமிழக முதல்வர் விஜய் விரைவில் நேரில் சந்திப்பாரா?

- Advertisement -

இன்று தமிழக முதல்வராக வலம் வரும் விஜய் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்று வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற 3வது நாளில் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு தனது ஆட்சியை அற்புதமாக துவங்கியிருக்கிறார்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சென்று முதல்வர் விஜய் சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரிய ஆச்சரியத்தை தந்தது. 1967ம் ஆண்டில் தேர்தலில் முதல்வராக வென்ற அண்ணாதுரை மட்டும்தான் காமராஜரை போய் இப்படி சந்தித்து இருக்கிறார்.

- Advertisement -

திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமின்றி வைகோ சீமான் அன்புமணி ராமதாஸ் தொல் திருமாவளவன் செல்வப்பெருந்தகை உள்பட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர்களையும் முதல்வர் விஜய் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்றதும், தனக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கு நேரில் நன்றி சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதே போல் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக விஜய் இந்தளவுக்கு புகழின் உச்சியை தொட காரணமாக இருந்தவர்கள் சிலர் உள்ளனர். அவர்களையும் முதல்வர் விஜய் நேரில் சென்று வாழ்த்துகளை பெறுவது மட்டுமின்றி அவர்களது சிறப்பான உதவிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய்க்கு சினிமாவில் அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் புகழ்நிலையில் உயர்வதற்கும் முக்கியமான வெற்றிப் படங்களாக சில இருந்தன. அந்த வரிசையில் பூவே உனக்காக படம் அந்த படத்தின் இயக்குனர் விக்ரமன், காதலுக்கு மரியாதை படம் அந்த படத்தின் இயக்குனர் பாசில் துள்ளாத மனமும் துள்ளும் படம் அந்த படத்தின் இயக்குனர் எழில் போன்றவர்கள் விஜய்க்கு ஒரு பெரிய ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தனர்.

அதே போல் இயக்குனர் ரமணா இயக்கிய திருமலை இயக்குனர் பேரரசு இயக்கிய திருப்பாச்சி சிவகாசி படங்கள் இயக்குனர் தரணி இயக்கிய கில்லி இயக்குனர் பிரபுதேவா இயக்கிய போக்கிரி படங்கள்தான் விஜய் உச்ச நட்சத்திரமாக மாற உதவியது. அதே போல் துப்பாக்கி பட இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மெர்சல் பிகில் தெறி இயக்கிய அட்லி போன்றவர்களையும் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்துள்ளது. இந்த லிஸ்ட்டில் விஜயின் முதல் படத்தை இயக்கிய அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் முக்கியமாக இடம்பெற்றுள்ளார்.

- Advertisement -

சற்று முன்