- Advertisement -
Homeபொழுதுபோக்குநெருங்கிய நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா? பொறுமையை இழந்த தயாரிப்பாளர் - கடைசியில்...

நெருங்கிய நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா? பொறுமையை இழந்த தயாரிப்பாளர் – கடைசியில் இப்படி கேட்டுட்டாரே?

- Advertisement -

ரேஸில் ஓடுகிற பந்தயக் குதிரை மீது அதிக பணம் கட்டுவதை போல தமிழ் சினிமாவில் மாா்க்கெட் மற்றும் இமேஜ் இருக்கிற ஹீரோ நடிகர்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்புவார்கள். அந்த வகையில் எப்போது நட்சத்திர ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் மவுசு அதிகமாக உள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் வெளியான பராசக்தி மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தது. ஆனால் பராசக்தி படம் ஏமாற்றம் தந்தது. அதே நேரத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் நடித்த மதராஸி படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக கைகொடுத்தது.

- Advertisement -

இப்போது தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறது. தேனி மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாத இறுதிக்குள் துவங்க உள்ளது. இந்த படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் என்றும் சொல்லப்படுகிறது.

சில ஹீரோ நடிகர்கள் தயாரிப்பாளர்கள் கூறும் படங்களில் நடிக்க கமிட் ஆகி விட்டு பெரும்தொகைை அட்வான்ஸ் ஆக வாங்கி விடுவார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுத்த கால்ஷீட் தேதியில் பெரிய டைரக்டர் பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்க சென்று விடுவார்கள். இது தமிழ் சினிமாவில் வழக்கமாக நடப்பதுதான்.

- Advertisement -

இதனால் ஏமாற்றமடையும் தயாரிப்பாளர்கள் அதுகுறித்து ஹீரோக்களிடம் நாகரிகம் கருதி கேட்பதும் இல்லை. அவர்களாக திரும்பி அழைக்கும் வரை காத்திருக்கின்றனர். அந்த வகையில் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கமிட் ஆனார். ஆனால் இதுவரை அந்த படத்தில் நடிக்கவில்லை. தனது நெருங்கிய நண்பர் என்ற முறையில் சுதன் பொறுமையாக இருந்தார்.

ஆனால் அவருக்கு பைனான்ஸ் தந்த கோல்டு மைன் மணிஸ் என்பவர் பலத்த நெருக்கடி தந்துள்ளார். அதனால் வேறு வழியின்றி நடிகர் சிவகார்த்திகேயனிடம், என்னிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுங்க என்று சுதன் கேட்டுள்ளார். நீண்ட காலமாக நண்பராக இருந்து உதவிய நண்பருக்கே இப்படி ஒரு நெருக்கடியை எஸ்கே கொடுத்து விட்டார் என்று இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்