- Advertisement -
Homeபொழுதுபோக்குதிட்டமிட்டதை விட 100 கோடி ரூபாய் அதிகம் செலவு வைத்த தங்கலான்... ரத்தமும் சதையுமாக படம்...

திட்டமிட்டதை விட 100 கோடி ரூபாய் அதிகம் செலவு வைத்த தங்கலான்… ரத்தமும் சதையுமாக படம் இருக்கும் என தயாரிப்பாளர் பெருமிதம்…

- Advertisement -

சேதுவில் தொடங்கி தில், தூள், சாமி, ஜெமினி, அந்நியன், ராவணன், தெய்வத்திருமகள், ஐ என ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் விக்ரம். தனது திறமையான நடிப்பின் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர், பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். குறிப்பாக, பிதாமகன் திரைப்படத்தில் சித்தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்த விக்ரமுக்கு, தேசிய விருது தேடி வந்தது.

எந்தக் கதையாக இருந்தாலும், அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொண்டு முழு ஈடுபாட்டுடன் அவர் நடித்து வருவதால், விக்ரமுக்கு என தனி இடம் தமிழ் சினிமாவில் எப்போதும் இருக்கும். இப்படி படத்தின் கதைக்காக மெனக்கிடும் அவர், கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் தள்ளாடி வருகிறார். பத்து எண்றதுக்குள்ள, இருமுகன், சாமி ஸ்கொயர், கோப்ரா, ஸ்கெட்ச் என அடுத்தடுத்த தோல்வி படங்களால் துவண்டிருக்கும் அவரது ரசிகர்கள், விக்ரமின் ஒரு பிளாக் பஸ்டர்க்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில், ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதற்காகவே எடுத்துக் கொண்டிருக்கும் படைப்புதான் தங்கலான். அட்டக்கத்தியில் தொடங்கி நட்சத்திரம் நகர்கிறது வரை தனது படைப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், அழுத்தமான திரைக்கதையின் மூலம் பரபரப்பாக பேசப்படும் இயக்குனர் பா ரஞ்சித்துடன் விக்ரம் இணைய போகிறார் என்ற செய்தி வெளியானதுமே, ரசிகர்களிடையே ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

நிச்சயம் இந்த ஜோடி மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும் என கோலிவுட் வட்டாரமே பேசிக் கொண்டிருக்க, அதற்கு ஏற்றார் போல் உழைத்து கொண்டிருக்கிறது தங்கலான் படக்குழு. சமீபத்தில் விக்ரம் பிறந்தநாளன்று வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவே, இதற்கு சாட்சி என்று கூறலாம்.

- Advertisement -

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு படத்தை எடுத்து வருகிறார் பா ரஞ்சித். நீண்ட ஜடையுடன், அடர்த்தியான தாடி, வேஷ்டி கட்டு, கையில் கம்பு என மிரட்டலாக காட்சியளிக்கும் விக்ரம் ஒரு பக்கம் இருக்க, இந்தப் பக்கம் பசுபதி, பூ பார்வதி, மாளவிகா மோகனன் ஏராளமானோர் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தங்கலான் சூட்டிங் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், நாங்கள் திட்டமிட்டதை விட படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது. தற்போது வரை நூறு கோடி ரூபாய் அதிகமாக செலவழித்துள்ளோம். ரத்தமும் சதையுமான படத்துக்கு இந்த தங்கலான்தான் ஆதாரம். இதனை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். ஸ்டுடியோ கிரீனுக்கு தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய பெயரைக் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்