- Advertisement -
சமீபத்தில் நடந்த டேராடூன் இலக்கிய விழாவில் பேசிய இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கூறியதாவது, கடந்த 2011ம் ஆண்டு இம்தியாஸ் அலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான ராக் ஸ்டார் படத்தின் பாடல்கள் பிடிக்காத காரணத்தால் தயாரிப்பாளர் எனக்கு 8 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் எனது இசைக்குழுவினருக்கு என் சொந்த பணத்தையே கொடுத்தேன். இதுகுறித்து நான் இயக்குனர் இம்தியாஸ் அலியிடம் கூட தெரிவிக்கவில்லை. இறுதியாக 8 மாதங்களுக்குப் பிறகு எனக்கு சம்பளத்திற்கான காசோலை வழங்கப்பட்டது என்று ஏஆர் ரகுமான் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்





