நடிகர் விஜய் இப்போது டாக் ஆஃப் தமிழ்நாடு ஆக மாறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவராக அவர் வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். கூட்டணி கட்சி எதுவும் இல்லாமல் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் அவர் முதல்வராகி விடுவார் என்று பலரும் உறுதியாக கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் விஜய் குறித்த எதிர்மறை விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. கரூர் சம்பவம் சிபிஐ விசாரணை கோர்ட்டில் விவாகரத்து வழக்கு திரிஷாவுடன் கிசுகிசு ரஜினியுடன் ஏற்பட்ட சலசலப்பு என பல பிரச்னைகளுக்கு மத்தியில் விஜய் இந்த தேர்தலை முதல் முறையாக எதிர்கொள்கிறார் என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, விஜய் நடித்த விஷ்ணு படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர். சூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை பேர் நின்றிருந்தார்கள். கேமரா ரோலிங்கில் இருக்கிறது.
அப்போது படத்தின் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகருக்கும் மகன் விஜய்க்கும் சண்டை வந்துவிட்டது. எல்லோருமே அதை பார்த்தார்கள். விஜய் கோபமாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. அதன்பிறகு அவரது அம்மா ஷோபா சமாதானம் செய்து விஜயை அழைத்து வந்து 2 பேரையும் சேர்த்து வைத்தார்.
நடிகர் விஜய் பற்றி அவரது நண்பர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது ஒரு ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது விஜய்க்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பேசி யாராவது சிரித்து விட்டால் போதும். உடனே விஜய் அப்செட் ஆகி விடுவார்.
அப்போது கையில் என்ன கிடைக்கிறதோ அதை தூக்கிப் போட்டுவிட்டு விஜய் உடனே வெளியே சென்று விடுவார். கதவையும் வேகமாக சாத்தி விட்டு செல்வாராம். அப்படி நடந்தால் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் கூட அவர்களுடன் விஜய் பேசவே மாட்டார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





