- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்தி இப்படி பண்ணிட்டாரே…? ரூ. 10 கோடி நஷ்டத்துக்கு தனது சினிமா தியேட்டரை எழுதி...

நடிகர் கார்த்தி இப்படி பண்ணிட்டாரே…? ரூ. 10 கோடி நஷ்டத்துக்கு தனது சினிமா தியேட்டரை எழுதி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

- Advertisement -

சினிமாவை பொருத்த வரை வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதுதான். அந்த சூட்சுமம் தெரிந்ததால் தான் இன்று வரை நடிகர் ரஜினிகாந்த் தனது இமேஜை இழக்காமல் 75 வயதில் நட்சத்திர ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அந்த வெற்றிக்கான சூட்சுமம் தெரியாததால் இன்னும் சூர்யா கார்த்தி ரவிமோகன் சியான் விக்ரம் விஜய் சேதுபதி போன்றவர்கள் தோல்வி படங்களை தொடர்ந்து தந்துக்கொண்டு இருக்கின்றன். அதிலும் சூர்யா கார்த்தி நடித்த படங்கள் பலவும் தொடர்ந்து தோல்வி படங்களாக இருக்கின்றன. கருப்பு படம் சூர்யாவுக்கும் சர்தார் 2 படம் கார்த்திக்கும் கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக கடந்த பொங்கலுக்கு வெளியான படம் வா வாத்தியார். படம் பார்த்த ரசிகர்கள் எல்லாம், நீ திரைக்கு வராமலேயே போயிருக்கலாம் வாத்தியார் என்று தான் கலாய்த்தனர். அந்தளவுக்கு காட்டு மொக்கை படமாக இது இருந்தது. ஜப்பான் படத்தை விட 10 மடங்கு மோசமான படம் என்ற கடும் விமர்சனங்களும் ரசிகர்களிடையே எழுந்தது.

வா வாத்தியார் படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் குறித்து கடும் விமர்சனங்களை வைத்த அதே ஞானவேல் ராஜா தான். இப்போது வா வாத்தியார் படம் மூலம் மீண்டும் மிகப்பெரிய கடனாளியாக மாறியிருக்கிறார். சுமார் 36 கோடி ரூபாய் வரை வா வாத்தியார் படம் அவரை கடனாளியாக மாற்றியிருக்கிறது.

- Advertisement -

வா வாத்தியார் படத்தை ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரூ. 18 கோடிக்கு தியேட்டர் உரிமம் பெற்றுள்ளது. படம் ஓடாததால் அந்த நிறுவனத்துக்கு ஞானவேல் ராஜா ரூ. 18 கோடியை திருப்பித் தர வேண்டும். அதே போல் கேரளாவில் கோகுலம் முவீஸ் இந்த படத்தை ரூ. 8 கோடி கொடுத்து தியேட்டர் உரிமம் பெற்றுள்ளது. கேரளாவிலும் படம் ஓடாததால் அதையும் திருப்பித் தர வேண்டும்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் சக்தி பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் ரூ. 10 கோடி கொடுத்து வா வாத்தியார் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமம் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் படம் ஓடாத நிலையில் அந்த 10 கோடி ரூபாயை திருப்பித் தர வேண்டும். அந்த 10 கோடி ரூபாய் கடனுக்காக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனக்கு சொந்தமான கிரீன் சினிமா தியேட்டரை அந்த நிறுவனத்துக்கே எழுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்