- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் வந்த பிரபல நடிகைக்கு தங்குவதற்கு ரூம் கிடைக்கலே; கடைசியில் என்ன ஆச்சு? - நடந்த...

ஷூட்டிங் வந்த பிரபல நடிகைக்கு தங்குவதற்கு ரூம் கிடைக்கலே; கடைசியில் என்ன ஆச்சு? – நடந்த சம்பவம் குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது நடிக்கும் முன்னணி நடிகர், நடிகையர் பலரும் படப்பிடிப்பு தளங்களில் கேரவன் வேன் பயன்படுத்துகின்றனர். ஷூட்டிங் நடிக்கும் போது ஷாட் இடைவேளைகளில் ஏசி வசதி கேரவனுக்குள் சென்று மணிகணக்கில் ஓய்வு எடுக்கின்றனர். ரிலாக்ஸ் ஆக படுத்து தூங்குகின்றனர்.

வெளியூர்களில், வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்றால் அவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் சகல நவீன வசதிகளும் நிறைந்த அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர். கோடிக்கணக்கில் வாங்குகிற சம்பளம் தவிர்த்து, இந்த ஆடம்பர செலவுகளை எல்லாம் தயாரிப்பாளர் தலையில் கட்டி விடுகின்றனர்.

- Advertisement -

ஆனால் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி எல்லாம் நடிகர் நடிகைகள் சொகுசாக படப்பிடிப்பு தளங்களில் இருந்தது இல்லை. ஒரு முறை நடிகர் செந்தில் கூறும்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாட் எடுக்கும் இடைவேளை நேரங்களில் கிராமப்புறங்களில் உள்ள வேப்ப மரத்தடி நிழலில்தான் உட்கார்ந்து கொள்வோம் என்று கூறியிருந்தார்.

ஒரு முறை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ள ஒரு காட்டு பகுதியில் கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக மட்டுமே காரை எடுத்துக்கொண்டு நான்கைந்து கிலோ மீட்டர் சென்று வந்ததாக ஒரு பேட்டியில் அவரே கூறியிருந்தார். அதே போல் நடந்த ஒரு சம்பவம் குறித்து அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பாளர், நடிகர் டி சிவா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சிவா கூறியதாவது, சந்தானபாரதி இயக்கத்தில் பிரபு சுகன்யா சிவரஞ்சனி விசு மண்ணாங்கட்டி ராதாரவி உள்ளிட்டோர் நடித்த படம் சின்ன மாப்ளே. இந்த ஷூட்டிங் கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. 35 ஆண்டுகளுக்கு முன் அங்கு பெரிய ஓட்டல்கள் வசதி கிடையாது. ஒரு ஓட்டலில் 2 அறைகள் மட்டுமே இருந்தது. அதில் நடிகர் பிரபு இயக்குனர் சந்தானபாரதி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்கிக்கொண்டனர்.

படத்தின் நாயகி சுகன்யா தங்குவதற்கு ரூம் கிடைக்கவில்லை. அவரது அப்பா, அம்மாவுடன் வந்திருந்தார். அப்போது பாதி நிலையில் இருந்த ஒரு ஓட்டல் அறையில், சுகன்யா தங்க நேர்ந்தது. ஜன்னலுக்கு கதவு கூட இல்லை. ஆனால் அப்பாவின் வேட்டி அம்மாவின் சேலையை ஜன்னலுக்கு திரையாக கட்டிக்கொண்டு அந்த அறையில் சுகன்யா தங்கிக்கொண்டார். அப்போது முன்னணி நடிகையாக அவர் இருந்தும் அந்தளவுக்கு தயாரிப்பாளர் சிரமத்தை புரிந்துக்கொண்டு ஒத்துழைப்பு தந்தார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்