புலி வருது புலி வருது என்கிற கதை போல கடந்த 5 ஆண்டுகளாக வாடிவாசல் படம் உருவாகும் வாடிவாசல் படம் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று காத்திருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்று முடிவான ஒரு பதில் கிடைத்திருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் படம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
அதாவது வாடிவாசல் படத்தை இயக்க வேண்டாம் என்ற முடிவுக்கு இயக்குனர் வெற்றிமாறனும், வாடிவாசல் படத்தில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு நடிகர் சூர்யாவும் வந்துவிட்ட நிலையில் இந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டது. அதனால் சூர்யா வேறு படங்களில் நடிக்க உள்ளார். மேலும் வெற்றிமாறன் வேறு படங்களை இயக்க முடிவு செய்துவிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வாடிவாசல் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் சூர்யாவுக்கு ரூ. 10 கோடியும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு ரூ. 10 கோடியும் அட்வான்ஸ் தொகையாக தந்திருக்கிறார். அதனால் அந்த ஒப்பந்தப்படி இப்போதும் தாணு தயாரிக்கும் ஒரு படத்தில் சூர்யாவும், தாணு தயாரிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறனும் இயக்க உள்ளார்.
அதனால் வாடிவாசல் படம் உருவாகாமல் தடைபட்டு போனாலும் தயாரிப்பாளர் தாணுவை பொருத்த வரை அவருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது. அதாவது சூர்யா நடிக்கும் ஒரு படத்தையும் அவர் இனி தயாரிக்க போகிறார். அதே போல் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒரு புதிய படத்தையும் அவர் தயாரிக்க போகிறார். அந்த வகையில் கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா என்ற டயலாக் தான் அவரது நிலையாக உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் அல்லது ஜித்து மாதவன் இயக்கும் பட்சத்தில் அந்த படத்தையும் தாணுதான் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதனால் வாடிவாசல் படம் நின்று போனாலும் தயாரிப்பாளர் தாணுவுக்கு இப்போது புதிதாக 2 படங்களை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வெற்றிமாறன் சிம்பு கூட்டணி, சூர்யா மாரி செல்வராஜ் அல்லது சூர்யா ஜித்து மாதவன் கூட்டணி என உருவாகும் இந்த 2 படங்களும் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





