- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயித்தவர்களுடன் அமர்ந்திருக்கும் பிரகாஷ் ராஜ் டெபாசிட் இழந்தவர், உங்களால் எனக்கு ரூ. 1 கோடி நஷ்டம்...

ஜெயித்தவர்களுடன் அமர்ந்திருக்கும் பிரகாஷ் ராஜ் டெபாசிட் இழந்தவர், உங்களால் எனக்கு ரூ. 1 கோடி நஷ்டம் – நேரடி தாக்குதல் நடத்திய பிரபல தயாரிப்பாளர் – என்ன செல்லம் இது?

- Advertisement -

நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகச்சிறந்த ஒரு திரைக்கலைஞனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக கில்லி படத்தில் நடிகை திரிஷாவை பார்த்து, ஹாய் செல்லம் ஐ லவ் யூ என்று மதுரை முத்துப்பாண்டி கேரக்டரில் அவர் சொல்லும் அந்த டயலாக் இன்று வரை டிரண்டிங்கில் இருந்து வருகிறது.

சமீப காலமாக ஆளும் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்த தனது எதிர் கருத்துகளை, விமர்சனங்களை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

சமீபத்தில் திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாணுடன், வார்த்தை மோதலில் பிரகாஷ்ராஜ் ஈடுபட்டதும், அவை சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சென்னையில் கடந்த வாரத்தில் நடந்த புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ், பாஜகவை விமர்சித்து பேசினார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருடன் அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை, அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த புகைப்படத்தை மேற்கோள் காட்டி எனிமி மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வினோத், தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தனது பதிவில் தயாரிப்பாளர் வினோத் கூறியிருப்பதாவது, உங்களுடன் அமர்ந்திருக்கும் மூன்று பேரும் தேர்தலை ஜெயித்தவர்கள். ஆனால் நீங்கள் டெபாசிட் இழந்தவர். அதுதான் வித்தியாசம். என்னுடைய படத்தின் சூட்டிங்கின் போது உங்களால் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் நீங்கள் சென்று விட்டீர்கள். இது பற்றி கேட்டதற்கு போனில் பேசுவதாக சொன்னீர்கள். ஆனால் இதுவரை பேசவில்லை.

இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடந்தது. அன்றைய தினம் 1000 துணை நடிகர்கள் இருந்தார்கள். 4 நாட்கள் உங்களுக்கு படப்பிடிப்பு இருந்தது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால், நீங்கள் சென்று விட்டீர்கள். அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு நின்றதோடு எனக்கு பெருத்த நஷ்டமும் ஏற்பட்டது என்று அதில் வினோத் கூறியிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சற்று முன்