- Advertisement -
Homeபொழுதுபோக்குட்ரெய்லர் ரிலீஸ் ஆவதற்கு முன்பு கோட் திரைப்படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்... ஒரே புகைப்படத்தில் இத்தனை...

ட்ரெய்லர் ரிலீஸ் ஆவதற்கு முன்பு கோட் திரைப்படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்… ஒரே புகைப்படத்தில் இத்தனை கதாபாத்திரங்களா… சிக்ஸர் அடித்த வெங்கட் பிரபு…

- Advertisement -

வெங்கட் பிரபு – விஜய் கூட்டணியில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகிறது கோட் திரைப்படம். இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட், ஒவ்வொரு மாதமும் புது புது தகவல்களை வெளியிட்டு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

 

- Advertisement -

இந்தத் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்து இருக்கிறது. அதாவது, கமல்ஹாசன் நடித்த ஒரு கைதியின் டைரி திரைப்படத்தை சற்று பட்டி டிங்கரிங் பார்த்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தந்தை – மகன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

 

- Advertisement -

அதாவது படத்தில் காவல்துறையின் சீக்ரெட் ஏஜெண்டாக விஜய் வருவாராம். தீவிரவாத கும்பல் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு போன்ற சதி திட்டங்களில் ஈடுபட, அதனை தந்து டீமுடன் விஜய் கண்டுபிடிப்பாராம். ஒரு கட்டத்தில் வில்லன்களை தந்தை விஜய் பழிவாங்கிக் கொண்டிருக்க, அவரை மகன் விஜய் டார்கெட் செய்கிறாராம்.

 

தீவிரவாத கும்பலால் இளைய வயது விஜய் வளர்க்கப்படுவது தான் படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் என்கிறார்கள். அதேபோல் படம் டைம் ட்ராவல்-ஐ கொண்ட கதை இல்லையாம். தந்தை விஜய் தனது மகன் 2006 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் இறந்துவிட்டார் என்று தான் நினைப்பாராம். ஆனால் அவன் உயிரோடு இருப்பதும், வெடிகுண்டு கும்பலின் முக்கியத் தலையாக இருப்பதையும் கிளைமாக்ஸின் முந்தைய காட்சியில் தான் விஜய்க்கு தெரிய வருமாம்.

 

இப்படி ஏகப்பட்ட திருப்பங்களுடன் கதை நகர, இறுதியில் வில்லன் கும்பல் மக்கள் கூடும் பொது இடத்தில் வெடிகுண்டை வைக்க, அதை தந்தை மற்றும் மகன் விஜய் இருவரும் சேர்ந்து முறியடிப்பது தான் படத்தின் கதை என்று கூறுகிறார்கள். இப்படி பல முடிச்சுகள் இருக்கும் இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு, மிக லாவகமாக கையாண்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

படத்தை பார்த்த விஜயும் திருப்தியில் இருக்கிறாராம். இந்த நிலையில் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் விஜய் இருக்கிறார்கள். பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இருவரும் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருக்கிறார்கள். மைக் மோகன், பிரேம்ஜி அமரன், அஜ்மல், வைபவ், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோரும் இடம் பெற்றிருக்கிறார்கள். அனேகமாக படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்