- Advertisement -
Homeபொழுதுபோக்குபடமே ஓடாமல் போனாலும் பரவாயில்லே… அதை மட்டும் செய்யாதீங்க… அஜீத்குமார் படம் மூலம் ஆப்பு வைத்த...

படமே ஓடாமல் போனாலும் பரவாயில்லே… அதை மட்டும் செய்யாதீங்க… அஜீத்குமார் படம் மூலம் ஆப்பு வைத்த இசைஞானி இளையராஜா!

- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த இந்த படத்தில் திரிஷா அர்ஜூன்தாஸ் பிரியா வாரியர் சிம்ரன் சுனில் பிரசன்னா பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தை அஜீத்குமார் ரசிகர்களை மட்டுமே குறிவைத்து எடுத்திருந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தீனா வாலி அமர்க்களம் சிட்டிசன் பில்லா உள்ளிட்ட படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்து ஏகே ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். அஜீத்குமாரின் பல பழைய பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றதால் படம் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

- Advertisement -

இதற்கிடையே இளையராஜா இசையில் ஏற்கனவே வெளியான இளமை இதோ இதோ ஒத்த ரூவா தாரேன் என்ஜோடி மஞ்சக்குருவி போன்ற பாடல்களையும் இந்த படத்தில் பயன்படுத்தி இருந்தார். குட்பேட் அக்லி படத்தில் தனது அனுமதியின்றி அந்த பாடல்களை பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் முறையான அனுமதி பெற்றதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில், யார் அந்த பாடல்களுக்கு உரிமையாளர் என சொல்ல வேண்டும், அந்த பாடல்களின் பதிப்புரிமை மீறப்பட்டதாக இளையராஜா தரப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் கோர்ட் அந்த பாடல்களை படத்தில் பயன்படுத்த தடை விதித்து அதிரடி உத்தரவிட்டது.

- Advertisement -

ஆனால் கோர்ட் உத்தரவுக்கு பிறகும் நெட்பிளிக்ஸ் இருந்த குட் பேட் அக்லி படத்தில் அந்த பாடல்கள் வந்ததால், இளையராஜா தரப்பில் கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து அந்த படத்தையே நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கி விட்டது. ஏற்கனவே ரூ. 70 கோடி வரை நஷ்டமடைந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மேலும் இப்போது நஷ்டம் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவங்களை பார்த்து பாடம் கற்றுக்கொண்ட பல தயாரிப்பாளர்கள், தங்களிடம் கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்களிடம், படம் ஓடாவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து படத்தில் இளையராஜா இசைத்த பாடல்களை எந்த சூழலிலும் பயன்படுத்தி விடாதீர்கள். மொத்த முதலுக்கும் அவரால் ஆபத்து வந்துவிடும் என்று எச்சரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்